சுடச்சுட

    

    07.05.1964 - பர்மாவிலிருந்து திரும்பும் இந்தியர் மறு வாழ்வுக்கு ஏற்பாடு: சென்னை சர்க்கார் தில்லியிடம் தகவல் கேட்கிறது

    By DN  |   Published on : 30th April 2016 03:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பர்மாவிலிருந்து திரும்பும் இந்தியர்களை இந்த நாட்டில் குடியமர்த்த எத்தகைய உதவி தேவைப்படும் என்று, இந்திய சர்க்காரிடம் சென்னை அரசாங்கம் தகவல் கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

    மொத்த வியாபாரத்தையும், சில்லறை வியாபாரத்தையும் பர்மா சர்க்கார் மேற்கொண்டதால் பர்மாவில் உள்ள இந்தியருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றி லோக சபையில் ஒரு கேள்விக்கு வெளி விவகாரத் துணை மந்திரி லட்சுமிமேனன் பதிலளிக்கையில், பர்மாவிலிருந்து திரும்பும் இந்தியரை குடியமர்த்த உதவுமாறு ராஜ்ய சர்க்கார்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

    கடந்த ஓராண்டில் பர்மாவில் இருந்து ஏற்கனவே சுமார் 40,000 இந்தியர்கள் வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட இந்தியர் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி.

    பாதிக்கப்பட்ட இந்தியர்களில் கணிசமானவர்கள் தென் இந்தியர்கள். அவர்கள் பலருக்கு இந்த ராஜ்யத்தில் உறவினர்கள் உள்ளனர்.

    திரும்பி வரும் நபர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய தொழில் விருப்பம், சர்க்காரிடமிருந்து அவர்கள் கோரும் உதவியின் தன்மை ஆகியவை குறித்து தெரிவிக்குமாறு யூனியன் சர்க்காரை சென்னை அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai