சுடச்சுட

  

  08.05.1965 - சினிமாவில் முத்தக் காட்சி வரலாமா? ராஜ்யசபையில் ருசிகர விவாதம்

  By DN  |   Published on : 30th April 2016 03:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சினிமா படங்களில் முத்தமிடும் காட்சிகள் இருக்கலாமா அல்லது கூடாதா என்பது பற்றி இன்று ராஜ்யசபையில் விவாதிக்கப்பட்டது.

  மேற்கத்திய பிலிம்களில் உள்ளதைப் போன்று முத்தமிடும் காட்சிகள் இருப்பதில் தவறு இல்லை என்று லோக் நாத் மிஸ்ரா கூறினார்.

  இந்திய வாழ்க்கை முறைக்கு இத்தகைய காட்சிகள் முற்றிலும் பொருத்தமற்றது என்று குமாரி மேரி நாயுடு குறிப்பிட்டார்.

  பகிரங்கமாக முத்தமிடுவது இந்த நாட்டில் வழக்கமில்லை என்றும், எனவே இத்தகைய காட்சிகள் உண்மை நிலவரத்தைத் திருத்திக் கூறுவதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

  இந்திய படங்களின் தரம் குறித்து விவாதம் நடந்தது. தற்போதைய தணிக்கை முறையை ஆராயவும் அவற்றை சீர்படுத்தும் வழிகளை சிபாரிசு செய்யவும் அறிஞர்கள், கல்வி நிபுணர்கள், பிலிம் துறை பிரதிநிதிகள், எம்.பிக்கள் ஆகியோரடங்கிய கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டும் என்று தனியார் தீர்மானத்தை சபை பரிசீலித்தது.

  தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

  மூன்று மணி நேர விவாதத்துக்கு உதவி செய்தி, ஒலிபரப்பு மந்திரி சி.ஆர். பட்டாபிராமன் பதிலளிக்கையில் கடந்த காலத்தில் அநேக கமிட்டிகள் இந்த போதிலும், இத்தகைய கமிட்டியொன்றை அமைக்கும் யோசனையைத் தாம் வரவேற்பதாகக் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai