Enable Javscript for better performance
09.05.1966 - தேர்தலில் ஒழுக்கம், திறமைக்கு மதிப்பு தர வேண்டும்: ராஷ்டிரபதி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    09.05.1966 - தேர்தலில் ஒழுக்கம், திறமைக்கு மதிப்பு தர வேண்டும்: ராஷ்டிரபதி வலியுறுத்தல்

    By DN  |   Published on : 30th April 2016 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டசபைகளுக்கும், இதர பொது ஸ்தாபனங்களுக்கு அபேட்சகர்களைத் தெரிந்தெடுப்பதில் அறநெறி தூய்மையையும், நெல்லொழுக்கத்தையும் திறமையையும் கவனிக்க வேண்டும் என்பதை ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

    கோபாலகிருஷ்ண கோகலேயின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் நிகழ்த்திய பிரசங்கத்திலேயே அவர் இதை வலியுறுத்தினார். இன்று சட்டசபைகளுக்கும், இதர பொது ஸ்தாபனங்களுக்கும் அபேட்சகர்களைத் தெரிந்தெடுப்பதில் அறநெறித் தூய்மையை நாம் வற்புறுத்துவதாகத் தோன்றவில்லை.

    சமயத்தையும் வகுப்பையும் கவனிக்கிறோமேயொழிய நல்லொழுக்கத்தையும் திறமையையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. நாட்டிலுள்ள ஒழுங்கின்மைக்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai