சுடச்சுட

  
  chemistry

  கார உலோகங்கள்

  * கார உலோகங்கள் பளபளப்பானவை, வெண்ணிற மானவை, மிருதுவானவே. அனைத்து கார உலோகங்களும் +1 ஆக்சிஜனேற்ற நிளையைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை வெளிக்கூட்டில் உள்ள ஒற்றை எலக்ட்ரானை எளிதாக இழக்கின்றன.

  * கார உலோகத் தொகுதியின் இறுதியில் உள்ள பிரான்சியம் கதிரியக்கத் தனிமமாகும்.

  * கார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவை

  ஊதா நிறத்தையும் தருகின்றன.

  * எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.

  * கார உலோகங்களை கத்தியால் வெட்ட இயலும். கார உலோகங்கள் வீரியம் மிகுந்தவை. எனவே இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.

  * கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.

  * கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு. கார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத்

  தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் செயல்படுகின்ரன.

  * கார உலோகங்களின் வினைதிறன் லித்தியத்திலிருந்து சீசியம் வரை கீழே செல்லும்போது அதிகரிக்கிறது.

  * சோடியம் டெளன் முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம் லேசான உலோகக் கலவை தயாரிப்பிலும் சில அரிய மண் உலோகங்களை அதன்

  ஆக்சைடுகளிலிருந்து தயாரிக்கும்போதும் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுகிறது.

  * ஐசோப்ரினை பலபடியாக்கி செயற்கை இரப்பர் தயாரிப்பில் சோடியம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.

  2 S தொகுதி தனிமங்கள்

  * தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் தொகுதியில் பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை அடங்கி உள்ளன. இத்தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

  * மண் என்ற வார்த்தை பழங்காலத்தில் ஒரு உலோக ஆக்சைடைத் குறிப்பதாகும். ஏனைனில் கால்சியம், ஸ்ட்ரான்சியம் மற்றும் பேரியம் ஆக்சைடுகள் நீர்க்கார கரைசல்களைத் தருவதால் இவைகள் காரமண் உலோகங்கள் என அழைகப்படுகின்றன.

  * மெக்னீசியத்தின் தாதுவான மெக்னசைட்டின் பெயரிலிருந்து மெக்னீசியம் பெறப்பட்டது.

  * ஆங்கில வேதியியலால் ஹம்ப்ரி டேவி என்பவரால் 1808 ஆம் ஆண்டு தூய மெக்னீசியம் கண்டறியப்பட்டது.

  * மெக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பத்தில்லை. சேர்ந்த நிலையில் அதிக அளவாக புவிப்பரப்பில் காணப்படுகிறது.

  * மென்னசைட், டோலமைட் எப்சம்  உப்பு, கார்னலைட் ஆகிய வடிவில் காணப்படுகிறது.

  * கடல்நீரில் கரைந்திருக்கும் C1 மற்றும் Na+ அயனிகளை அடுத்து மூன்றாவதாக மெக்னீசியம் Mg2+ காணப்படுகிறது. எனவே பெருங்கடல்களே மெக்னீசியத்தின் மூலங்களாகும்.

  * தாவர உலகத்தில் பச்சை நிறத்தையுடைய இலைகளில் குளோரோஃபில் என்ற சேர்மமாக மெக்னீசியம் பரந்து காணப்படுகிறது.

  P பிரிவு தனிமங்கள்

  * தனிம வரிசை அட்டவணையில் 13ம் தொகுதியிலிருந்து 18ம் தொகுதி வரை சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன.

  * இணைதிறன் கூட்டில் முழுமையாக நிரப்பப்படாத p ஆர்பிட்டாலைப் பெற்றுள்ள தனிமங்கள் p பிரிவு தனிமங்கள் ஆகும்.

  * இத்தனிமங்கள் பொதுவாக ns2np1-5 என்ற வெளிக்கூடு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன. p பிரிவு தனிமங்கள் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகிதியிலும் ஐந்து தனிமங்கள் வீதம் மொத்தம் 25 தனிமங்கள் உள்ளன.

  * இவற்றில் 15 தனிமங்கள் அலோகங்களும், 10 உலோகங்களாகவும் உள்ளன.

  * 13வது தொகுதியில் போரான், அலுமினியம், கேலியம், இன்டியம் மற்றும் தாலியம் ஆகியவை உள்ளன. இவை போரான் தொகுதி தனிமங்கள் எனப்படும்.

  * கார்பன், சிலிக்கான், ஜெர்மானியம், காரீயம் மற்றும் வெள்ளீயம் போன்றவை 14வது தொகுதியில் உள்ளன. இவை கார்பன் தொகுதி எனப்படும்.

  * நீர்வடிவ தனிம ஆவர்த்தன அட்டவணையில் 15வது தொகுதியில் அதாவது V-A ல், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஆண்டிமனி, பிஸ்மத், ஆர்சனிக் பொன்ற தனிமங்கள் உள்ளன. இத்தொகுதி நைட்ரஜன் தொகுதி என அழைக்கப்படுகிறது.

  * இத்தொகுதியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியன அலோகங்கங்களாகும். எனினும் பிஸ்மத் ஒரு உலோகமாகும்.

  * ஆர்சனிக் அலோகமாக இருப்பினும், உலோகத்திற்குரிய சிறப்புப் பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  * எனவே இத்தொகுதியில் நைட்ரஜனில் இருந்து பிஸ்மத் வரை செல்லச் செல்ல அலைகத் தன்மையில் இருந்து உலோகத் தன்மைக்கு சீரான மாற்றம் காணப்படுகிறது.

  மந்த வாயுக்கள்

  * ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகிய தனிமங்கள் 18வது தொகுதியில் அமைந்துள்ளன. இவையே மந்த வாயுக்கள் ஆகும்.

  * இந்த தனிமங்கள் ஹீலியத்தைத் தவிர மற்ற தனிமங்கள் மூழுமை பெற்ற எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.

  * எனவே இவற்றுடன் எளிதில் எலக்ட்ரானைச் சேர்க்கவோ, நீக்கவோ இயலாது. எனவே இவற்றின் வினைபுரியும் தன்மை மிகவும் குறைவாகும்.

  s தொகுதி தனிமங்கள்

  * இவை பிரதிநித்துவ தனிமங்கள் என்றும் குறிப்பிடப்படும். அதாவது ஆவர்த்தன அட்டவணையில் 1 ஆம் தொகு, 2 ஆம் தொகுதி மற்றும் 13 முதல் 17 ஆம் தொகு ஆகியவற்றில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவ தனிமங்கள் எனப்படுகின்றன.

  * இவற்றில் முதல் தொகுதி தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இரண்டாவது தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனப்படும்.

  * இவை இரண்டும் சேர்ந்து s தொகுதி தனிமங்கள் எனப்படும்.

  * பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்டாரன்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை கார மண் உலோகங்கள் எனப்படும்.

  * லித்தியம், சோடியம், பொட்டாசியம், ரூபிடியம், சீசியம் மற்றும் பிரான்சியம் ஆகிய தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இவை தாவர சாம்பல் என்றும் குறிப்பிடப்படும்.

  கதிரியக்கம்

  * 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கோரல் என்பவர் யுரேனியத் தனிமத்திலிருந்து கதிரியக்கத்தை முதலாவதாகக் கண்டறிந்தார்.

  * கியூரி அம்மையார் கதிரியக்கத் தன்மை கொண்ட மேலும் இரு புதிய தனிமங்களைக் கண்டறிந்தார். அவை ரேடியம், பொலேனியம் ஆகும்.

  * தோரியமும் ஒரு கதிரியக்கத் தனிமமாகும்.

  * தற்போது செயற்கை கதிரியக்க தனிமங்கள் தயார்க்கப்பட்டுள்ளன. கதிரியக்கத் தன்மையற்ற தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்களாக செயற்கை அணுக்கரு மாற்று முறையில் மாற்றப்படுகின்றன.

  * யுரேனியம், தோரியம், பொலேனியம், ரேடியம் ஆகியவை இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களாகும்.

  * வேதிவினைகள் அணுக்களின் உட்கருவுக்கு வெளியே நடைபெறும் மாற்றங்கள் ஆகும்.

  * கதிரியக்க வீச்சு என்பது அணுக்கருவிற்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

  * கதிரியக்கத்தில் வெளியிடப்படும் மின்சுமை கொண்ட துகள்களின் பாதை மற்றும் தன்மையை ஆராய மேகப்பெட்டகம் முறை பயன்படுத்தப்பட்டது.

  * செயற்கை முறையில் தயார்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்கிளியைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

  அணுக்களின் அணைப்பு

  * ஹீலியத்தில் அணுக்களின் அமைப்பின்படி புரோட்டான்களின் எண்ணிக்கை 2, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2, நியூட்ரான்களின் எண்ணிக்கை 2, எல்க்ட்ரான் அமைப்பு (2) ஆகும்.

  * நியான் தனிமத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 10, எலக்ட்ரான் எண்ணிக்கை 10, நியூட்ரான் எண்ணிக்கை 10, எல்க்ட்ரான் அமைப்பு (2,8) ஆகும்.

  * சோடியத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 11, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 11, நியூட்ரான்களின் எண்ணிக்கை 12, எலக்ட்ரான் அமைப்பு (2,8,1) ஆகும்.

  * குளோரினில் புரோட்டான் எண்ணிக்கை 17, எலக்ட்ரான் எண்ணிக்கை 17, நியூட்ரான் எண்ணிக்கை 18, எலக்ட்ரான் அமைப்பு (2,8,7) ஆகும்.

  ஆல்ஃபா கதிரியக்கம்

  * ஆல்ஃபா துகள்கள் ( துகள்கள்) ஹீலியத்தின் (2He4) உட்கருவைப் பெற்றவை. ஹைட்ரஜனின் அணு நிறையை விட 4 ம"்ஙகு கனமானது.

  * அதிகயளவில் காணப்படும் U-238 ஐசோடோப்பு ஆல்ஃபா கதிர்கள் முக்கிய மூலம் ஆகும். இவை கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப் பெரிய துகள் ஆகும்.

  * ஆல்ஃபா துகள்களுக்கு ஊடுருவும் திறன் மிகக் குறைவு. மேலும் அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால் இவறஅறின் இயக்க ஆற்றல் அதிகமாகும்.

  * எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகின்றன.

  * காற்றினை தொடர்ந்து அயனியாக்குவதால் இதன் ஆற்றல் விரைவாகக் குறைந்துவிடுகிறது. இதனால் இவை காற்றில் சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப் படுகின்றன. இத்துகள்கள் காற்றில் அதிகபட்ச தூரம் எவ்வளவு கடக்குமோ அதை ஆல்ஃபா கதிரின் இயக்க எல்லை என்று அழைக்கிறோம்.

  * ஆல்ஃபா கதிர்கள் மின் சுமை பெற்றவையாதலால் அவை மின் மற்றும் காந்தப் புலங்களினால் விலக்கமடைகின்றன. புகைப்படத்தாளை ஆல்ஃபா கதிர்கள் பாதிக்கின்றன.

  * கதிரியக்க தனிமத்திலிருந்து ஒரு ஆல்ஃபா கதிர் வெளியாகையில் அதன் நிறையில் 4 அலகுகளும், அதன் மின் சுமையில் 2 அலகுகளும் குறைகின்றன. புதிதாக உருவாகும் தனிமம் வேதிப்பண்புகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது. இதுவே கதிரியக்க மாற்றம் எனப்படும். இதனைக் கண்டறிந்தவர் சாடி என்ற அறிஞர் ஆவார்.

  பீட்டா கதிரியக்கம்

  * பீட்டா கதிர்கள் பொருண்மைத் துகள்களாகும். அவை எல்க்ட்ரான்கள் ஆகும்.

  * காற்றை இக்கதிர்கள் மிதமான முறையில் அயனியாக்குகிறது. இதன் இயக்க எல்லை, ஆல்ஃபா கதிர்களைப் போன்று தெளிவாக வரையறுக்கப்பட வில்லை.

  * இவை அதிக திசைவேகம் பெற்று இயங்குகின்றன. சில நேரங்களில் ஒளியின் திசைவேகத்தை ஒத்துள்ளன.

  * பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களைப் பாதிக்கின்றன. இவை மின்சுமை பெற்றிருப்பதால் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்கமடைகின்றன.

  * இவை அயனியாக்கல் வினைக்கு ஆற்றலைச் செலவழிப்பதில்லை. எனவே, இவை ஆல்ஃபா துகள்களை விட காற்றில் அதிக தூரம் கடக்கவல்லவை.

  * பீட்டா துகள்கள், ஆல்ஃபா துகள்களை விட 7000 மடங்கு இலேசானது. இவை நின்றொளிர்தல் நிகழ்வினைச் செய்கின்றன.

  காமா கதிர்கள்

  * காமா கதிர்கள் ஆல்ஃபா, பீட்டா துகள்கள் போன்ற பொருண்மைத் துகள்கள் அல்ல. ஆனால், அவை மின்காந்த அலைகளாகும். அவற்றின் அலை நீளம் மிகச்சிறியது.

  * காமாக் கதிர்கள் கண்ணிற்குப் புலப்படாது. இவை காற்றினை அயனியாக்கும். இக்கதிர் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

  * இவை மின்காந்தக் கதிர்களானதால் மின் காந்தப் புலங்களால் பாதிக்கப்படுவதில்லை. படிகங்களால் இக்கதிரிகள் விளிம்பு விளைவு அடைகின்னறன.

  * எக்ஸ் கதிர்களை விட இவற்றின் ஊடுருவும் திறன் அதிகம். ஏனெனில், எக்ஸ் கதிர்களை விட இவற்றின் அலைநீளம் குறைவு.

  * காமா கதிர்களின் தாக்குதலால் உயிர் திசுக்கள் இறந்துவிடலாம். எனவே இவை ஆபத்தானவை.

  * காமாக் கதிர்களை வெளியிடும் கதிரியக்க தனிமத்தின் உட்கரு வேதிப்பண்புகளில் மாறுவதில்லை.

  * ஒரு ரேடியோ ஐசோடோப்பு கதிரியக்கத்தினால் அதன் தொடக்க நிறையில் இருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு ஆகும் காலம் அரை ஈயுட்காலம் எனப்படும்.

  * இதனைப் பயன்படுத்தி, பாறைகள், மரம் மற்றும் புவியில் கிடைக்கும் கரிமப் பொருட்களின் வயதினை ரேடியோ கார்பன் தேதியிடல் முறையில் கண்டறிகிறார்கள்.

  * கதிரியக்க வீச்சுகளை அறியப் பயன்படும் கருவிகள் எலக்ட்ரோ மீட்டர், மேகப்பெட்டகம், கெய்கர்-முல்லர் எண்ணி மற்றும் குறைகடத்தி மின்சுற்றுகள் ஆகியன.

  செயற்கைக் கதிரியக்கம்

  * ஒரு தனிமம் வேறொரு தனிமமாக செயற்கை கதிரியக்க முறையில் மாற்றப்படுதலுக்கு தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.

  * தூண்டப்பட்ட கதிரியக்க தனிமங்கள் செயற்கை கதிரியக்க ஐசோசோப்புகள் எனப்படும். கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கொண்டு நோய்களைக் கணப்படுத்துதல் கதிரியக்க சிகிச்சை எனப்படும்.

  கதிரியக்கத்தின் பயன்கள்

  * கதிரியக்க கோபால்ட் Co-60, U-238 ஆகியவை புற்றுநோய் மற்றும் கட்டுகளைக் குணப்படுத்தும் சிகிச்சையில் பயன்படுகின்றன.

  * கதிரியக்க அயோடின் (I-123) தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

  * பால்பரஸ்-32 அல்லது ஸ்ட்ரான்சியம்-90 ஆகியவை தோல் புற்றுநமோயைக் குணப்படுத்துகிறது.

  * மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்கக் கதிர்வீச்சுப் பயன்படுகிறது.

  * டிரிட்டியம், கார்பன்-14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

  * காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகிறது.

  * கதிரியக்கத் தனமையுள்ள அயர்ன் (Fe-59)-ஐப் பயன்படுத்தி இரத்த சோகை நோயைக் குணப்படுத்தலாம்.

  * கதிரியக்க பாஸ்பரஸ் (P-32) உரங்களுடன் சேர்க்கபட்டு வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறியப்பயன்படுகிறது.

  * ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ஆகியவை உருவாக்கப் படுகின்றன.

  * காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறியமுடிகிறது. பொருட்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறிய கதிர்வீச்சுகள் உதவுகின்றன.

  * கதிரயக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டுபிடிக்க முடியும்.

  * நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்சனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

  * ரேடியோ ஐசோடோப்புகள் குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறியப் பயன்படுகின்றன.

  * உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் ஆகியவற்றை அறிய காமா கதிர் பயன்படுகிறது.

  * காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகின்றன.

  * தொல்பொருள் மற்றும் பழம்பொருட்களின் வயதை அறிய C-14 ஐசோடோப்பு பயன்படுகிறது. கதிரியக்க கார்பனின் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள் இக்கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதினைத் தீர்மானிக்கலாம்.

  * இம்முறையில் ககண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பழமையான பாறை வட கனடாவில் உள்ளது. இது 3.96 X 10p வருடங்கள் பழமையானது.

  * காமாக் கதிர் வீச்சு பாக்டீரியாவை அழிக்கப் பயன்படுகிறது.

   

  இணையத்தோடு இணைந்திருங்கள். தொடர்ச்சியை நாளை பார்ப்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai