Enable Javscript for better performance
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வர்- Dinamani

சுடச்சுட

  

  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வர்

  Published on : 11th May 2014 12:03 PM  |   அ+அ அ-   |    |  

  pakthava

  01. தமிழகத்தில் சைமன்குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தலைமையேற்றவர் - சத்தியமூர்த்தி.

  02. நீல் சிலை சத்தியாகிரகம் நடைபெற்ற இடம் - சென்னை

  03. சென்னை சுதேசிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1852.

  04. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தை துவக்கி வைத்தவர் - ராஜாஜி

  05. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலை இயற்றியவர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.

  06. சுதேசி இயக்கத்தை சென்னை மாகாணத்தில் முன்னின்று நடத்தியவர் - வ.உ. சிதம்பரம் பிள்ளை.

  07. வேளூர் புரட்சி நடைபெற்ற நாள் - 1806 ஜூலை 10.

  08. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக தோன்றிய முக்கிய கலகம் - பாளையக்கார்ர கலகம் - 1799

  09. கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் - அக்டோபர் 16.

  10. ஆங்கிலேயருக்கு எதிராக எல்லா இந்தியர்களையும் ஒன்றிணைத்த முதல் பிரகடனம் - 1801  ஆம் ஆண்டு பிரகடனம்.

   

  11. இந்தியப் புரட்சியின் தாய் என்று சிறப்பிக்கப்படுபவர் - பிகாஜிகாமா.

  12. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு

  13. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பரிவிற்கு தலைமையேற்றவர் - கேப்டன் லெட்சுமி செகல்

  14. தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப்படுபவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

  15. தென்னாட்டின் ஜான்சிராணி என காந்தி அடிகளால் அழைக்கப்பட்டவர் - அஞ்சலை அம்மாள்

  16. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்றழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை - அம்புஜத்தம்மாள்.

  17. சிவகங்கைப் போரில் ஆங்கிலேயருடன் வீரப்போர் புரிந்தவர் - வேலுநாச்சியார்.

  18. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிர பங்கேற்றவர் - அருணா ஆசப் அலி.

  19. தற்கால அவ்வையார் எனப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை - அசலாம்பிகை அம்மையார்.

  20. காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றவர் - சரோஜினி நாயுடு.

   

  21. தமிழகத்தின் முதல் நீதிக்கட்சி முதல்வர் - சுப்பராயலு ரெட்டியார்.

  22. நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1944

  23. தமிழகத்தின் சுதந்திரா கட்சியை உருவாக்கியவர் - ராஜாஜி

  24. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வர் - பக்தவத்சலம்

  25. அதிமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டு - 1977

  26. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் - ஜானகி ராமச்சந்திரன்.

  27. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் - ஜெ.ஜெயலலிதா

  28. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதல் முறையாக அமல்படுத்தப்பட்ட வருடம் - 1976.

  29. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - செங்கற்பட்டு (1929)

  30. மதிமுக துவங்கப்பட்ட வருடம் - 1994

   

  31. இந்தியாவின் மிக நீளமான நதி - கங்கை

  32. இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2008.

  33. கங்கையின் பல்வேறு பெயர்கள் - வங்காள தேசத்தில் பத்மா, பிரம்மபுத்திராவுடன் இணையும் போது மேக்னா.

  34. தற்போதைய யமுனையின் புராண காலப் பெயர் - காளிநதி.

  35. உலகின் மிகப் பெரிய நதி - அமேசான்

  36. உலகின் மிக நீளமான நதி - நைல்

  37. தென்னக கங்கை எனச் சிறப்பிக்கப்படும் நதி - காவிரி.

  38. மேற்கு நோக்கிப் பாயும் இந்திய நதிகளில் மிகப் பெரியது - காவிரி.

  38. மேற்கு நோக்கிப் பாயும் இந்திய நதிகளில் மிகப் பெரியது - நர்மதை

  39. சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டம் அமைந்துள்ள நதி - நர்மதை.

  40. "தெலுங்கு கங்கை" எனச் சிறப்பிக்கப்படும் நதி - கிருஷ்ணா.

   

  41. ஐ.நா. சர்வதேச வன வருடம் - 2011

  42. அர்ஜென்டினாவில் காணப்படும் தீப்பிடிக்கா மரம் - ஒம்பு

  43. காட்டு மரங்களின் ராஜா எனச் சிறப்பிக்கப்படும் மரம் - தேக்கு

  44. தேசிய வணக்கொள்கை அறிவிக்கப்பட்ட வருடம் - 1952

  45. இந்தியாவின் மொத்தப் பரப்பில் வனப் பரப்பின் சதவிகிதம் - 20.60 சதவிகிதம்.

  46. தேசிய வனக்கொள்கையின்படி நாட்டின் மொத்தப்பரப்பில் வனங்களாக இருக்க வேண்டிய பகுதி - 33 சதவிகிதம்.

  47. இந்தியாவில் மிக அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலம் - மத்தியப் பிரதேசம்.

  48. இந்தியாவின் முதல் உயிர் மண்டலக் காப்பகம் (Biosphere Reserve) -  நீலகிரி.

  49. Forest Survey of India-வின் தலைமையகம் - டெஹராடூன் (உத்தர்காண்ட்).

  50. இந்தியாவின் மிகப் பெரிய உயிர்மண்டலக் காப்பகம் - கியான்பாரதி (குஜராத்)

   

  51. இருப்புப்பாதை இல்லாத இரு மாநிலங்கள் - சிக்கிம் மற்றும் மேகாலயா.

  52. இந்தியாவின் மெட்ரோ மனிதன் என்றழைக்கப்படுபவர் - இ. ஸ்ரீதரன்.

  53. உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட் ஃபாரம் - கரக்பூர்.

  54. இந்திய இரயில்வேயின் மொத்த மண்டலங்கள் (மெட்ரோ இரயில்வே தவிர்த்து) பதினாறு.

  55. மெட்ரோ இரயில்வேயின் தலைமையகம் - கொல்கத்தா

  56. இந்தியாவின் முதல் மின்சார இரயில் - டெக்கான் குயின் (1929)

  57. இந்திய இரயில்வேயின் தலைமையகம் - புதுதில்லி.

  58. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரயில் நிலையம் - சத்ரபதி சிவாஜி டெர்மினல்.

  59. கொங்கண் இரயில்வே கடந்து செல்லும் மாநிலங்கள் - கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா

  60.  வடகிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையகம் - கோரக்பூர்.

   

  61. இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் - 73 சதவிகிதம்

  62. இந்தியாவின் மக்கள் நெருக்கம் - ச.கி.மீ.க்கு 382 நபர்கள்.

  63. இந்தியாவின் ஆண் - பெண் விகிதம் - 943

  64. மக்கள் நெருக்கம் குறைந்த மாநிலம் - அருணாசலப்பிரதேசம் (17 பேர்).

  65. இந்தியாவின் பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி - 17.7 சதவிகிதம் (2001-2011)

  66. மிகக்குறைவான மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட மாநிலம் - நாகலாந்து - 0.6 சதவிகிதம்.

  67. அதிகமான மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட மாநிலம் - மேகாலயா - 27.9 சதவிகிதம்.

  68.  எழுத்தறிவு அதிகமுழ்ழ மத்திய ஆட்சிப் பகுதி - இலட்சத்தீவு - 91.8 சதவிகிதம்.

  69. 2011 சென்சஸின் முத்திரைச் சொல் - "நமது சென்சஸ், நமது எதிர்காலம்"

  70. 2011 இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - 15-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai