TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 12

இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 12

செய்யுள்: இனியவை நாற்பது

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது.

சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் ினிது

- பூதந்சேந்தனார்.

சொற்பொருள்:

* குழவி - குழந்தை

* பிணி - நோய்

* கழறும் - பேசும்

* மயரி - மயக்கம்

* சலவர் - வஞ்சகம்

* மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.

* ஊர் - மதுரை

* காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

* ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

தமிழ்ப்பசி

சொற்பொருள்:

* குவை - குவியல்

* மாரன் - மன்மதன்

ஆசிரியர் குறிப்பு:

* இயற்பெயர் - க.சச்சிதானந்தன்

* ஊர் - இலங்கையில் யாழ்ப்பான மாவட்ட பருத்தித்துறை

* பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி

* புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.

* படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பானக்காவியம்

* சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

செய்தி உருவாகும் வரலாறு

* உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.

* அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

* ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்

* ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.

* ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.

* செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

* செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.

* செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.

* செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.

*  பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.

* செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.

* உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.

* இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.

*  "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.

* விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.

* செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.

இதழியல் கலைச்சொற்கள்:

* Bulletin - சிறப்புச்செய்தி இதழ்

* Deadline - குறித்த காலம்

* Editorial - தலையங்கம்

* Fake News - பொய்ச்செய்தி

* Flash News - சிறப்புச் செய்தி

* Folio No - இதழ் எண்

* Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி

* Layout - செய்தித்தாள் வடிவமைப்பு

இலக்கணம்: தொகா நிலைத் தொடர்

* ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துமானால் அது தொகாநிலைத்தொடர் எனப்படும்.

* "கபிலன் வந்தான்" - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும் பயனிலை வந்துள்ளதால், இது எழுவாய்த் தொடர் என்பர்.

* "கதிரவா! வா" என்பது விளித்தொடர் ஆகும்.

* கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்வதால் இதை, வினைமுற்றுத்தொடர் என்பர்.

* தொகாநிலை தொடரின் வகைகள் ஒன்பது.

* வாழ்க வாழ்க வாழ்க- இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத் தொடர்.

* விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச் சொல்லோடு முடிவதால் இது பெயரெச்சத்தொடர்.

* வந்துபோனான் -இதில் வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதால் இது வினையெச்சத் தொடர் என்பர்.

* வீட்டைக்கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதால் இதனை வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.

* மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல், இதைத் தொடர்ந்து முனிவர் என்னும் சொல் வந்துள்ளதால், இது உரிச்சொற்றொடர்.

வாழ்க வாழ்க வாழ்க - இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர்.

* தொகாநிலை தொடரின் வகைகள் - ஒன்பது.

* மற்றொன்று - மற்று + ஒன்று "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் தொடர்ந்து வந்துள்ளதால் இது இடைச்சொற்றொடர்.

இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர்

* பாம்பு பாம்பு - இதனைப் பிரித்தால் பொருள் தரும். எனவே இது அடுக்குத்தொடர் ஆகும்.

* "கலகல"  - இதனை பிரித்தால் பொருள் தராது. எனவே இது இரட்டைக்கிளவி ஆகும்.

உரிய எழுத்து வழக்குச் சொற்களை அறிவோம்:

பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு

* கோர்த்து      - கோத்து

* சுவற்றில்     - சுவரில்

* நாட்கள்       - நாள்கள்

* மனிதில்      - மனத்தில்

* பதட்டம்      - பதற்றம்

* சிலவு         - செலவு

* அருகாமையில் - அருகில்

பிழை திருத்தம்:

பிழை       -        சரி

* ஓர் மாவட்டம்     - ஒரு மாவட்டம்

* ஒரு அமைச்சர்     - ஓர் அமைச்சர்

* அவரது மகனோடு  - அவருடைய மகனோடு

* மேற்க்கொண்டார்  - மேற்கொண்டார்

* அந்த சுற்றுலா     - அந்தச் சுற்றுலா

* கண்டதை கூறவே - கண்டதைக் கூறவே

* அவர்தான்         - அவர்தாம்

செய்யுள்: திருவள்ளுவமாலை

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காடும் படித்தால் - மனையளகு

வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா வரி

- கபிலர்

சொற்பொருள்:

* வள்ளை - நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு

* அளகு - கோழி

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - கபிலர்

* காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர்.

நூல் குறிப்பு:

* திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது.

* இந்நூலில் 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.

* இப்பாடலில் அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது.

உவமை:
* சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிருபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள் தெளிவாக காட்டும்.

உவமிக்கப்படும் பொருள்:
* வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.

அறிவியல் கருத்து
* ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவில்லுள்ள பொருளின் உருவத்தை புள் நுனியில் தேங்கிய சிருபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும் என்ற கபிலரின் சிந்தனை அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துக்கிறது.

நளவெண்பா

சொற்பொருள்:

* ஆழி - கடல்

* விசும்பு - வானம்

* செற்றான் - வென்றான்

* அரவு - பாம்பு

* பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு

* வள்ளை - ஒருவகை நீர்க்கொடி

* கடா - எருமை

* வெளவி - கவ்வி

* சங்கின் பிள்ளை - சங்கின்குஞ்சுகள்

* கொடி - பவளக்கொடி

* கோடு - கொம்பு

* கழி - உப்பங்கழி

* திரை - அலை

* மேதி - எருமை

* கள் - தேன்

* புள் - அன்னம்

* சேடி - தொழி

* ஈரிருவர்  - நால்வர்

* கடிமாலை - மணமாலை

* தார் - மாலை

* காசினி - நிலம்

* வெள்கி - நாணி

* மல்லல் - வளம்

* மடநாகு - இளைய பசு

* மழவிடை - இளங்காளை

* மறுகு - அரசநீதி

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - புகழேந்திப் புலவர்

* பிறந்த ஊர் - களத்தூர்

* சிறப்பு - வரகுண பாண்டியனின் அவைப் புலவர்

* ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி

* காலம் - பனிரெண்டாம் நூற்றாண்டு

* இவரை "வெண்பாவிற் புகழேந்தி" என சிறப்பிப்பர்.

நூல் குறிப்பு:

* நளவெண்பா என்பது, நாளது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.

* இந்நூல் சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.

* இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.

உரைநடை: உலகம் உள்ளங்கையில்

* கணக்கிடுவதற்காக முதலில் எளிதான "மணிச்சட்டம்" உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.

* பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.

* 1833 இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

* ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி ல்வ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் "முதல் செயல் திட்ட வரைவாளர்" எனப் போற்றப்படுகிறார்.

* ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிம்பெர்நெர் லீ என்னும் வல்லுநர் "உலகளாவிய வலைப்பின்னல்" எனப் பெயரிட்டார். இதனை "வையாக விரிவு வலை" எனவும் அழைக்கலாம்.

* கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" என பில்கேட்ஸ் கூறுகிறார்.

விவேகசிந்தாமணி

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்பு வின்கனி என்று

தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்

வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி

மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்

போனது வண்டோ பறந்தது பழந்தான்

புதுமையோ இதுஎனப் புகன்றாள்

சொற்பொருள்:

* மது - தேன்

* தியங்கி - நாவல்

* சம்பு - நாவல்

* மதியம் - நிலவு

நூல் குறிப்பு:

* விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.

* இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.

பாரதத்தாய்

சொற்பொருள்:

* வாய்மை - உண்மை

* களையும் - நீக்கும்

* வண்மை - வள்ளல் தன்மை

* சேய்மை - தொலைவு

பிரித்து எழுதுக:

* தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - அசலாம்பிகை அம்மையார்

* ஊர் - திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை

நூல்கள்:

* ஆத்திசூடி - வெண்பா

* திலகர் புராணம்

* குழந்தை சுவாமிகள் பதிகம்

* காந்தி புராணம் (20134 பாடல்கள்)

* இராமலிங்க சுவாமிகள் பதிகம் (409 பாடல்கள்)

* சிறப்பு: இவரை "இக்கால ஒளவையார்" என திரு.வி.க பாராட்டுகிறார்.

அகரமுதலி வரலாறு

அகராதி:

* அகரம் + ஆதி = அகராதி

* ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.

* அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

* தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.

* நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.

* நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி:

* திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு:

* நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.

* இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

* இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

* வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.

* இது கி.பி.1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.

* சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.

* பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியான பொருள் விளக்கம் இருந்தது.

* வீரமாமுனிலர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய - தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி:

* "தமிழ்-தமிழ் அகராதி" ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

* இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்:

* குப்புசாமி என்பவர் "தமிழ்ப் பேரகராதி" வெளியிட்டார்.

* இராமநாதன் எனபவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி" எனும் பெயருடன் வந்தது.

பாவனந்தர்:

* பவானந்தர் என்பவர் 1925 ஆம் ஆண்டு "தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்" , 1937 ஆம் ஆண்டு "மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்" வெளியிட்டார்.

சண்முகம்:
* மு.சண்முகம் என்பவரால் "தமிழ்-தமிழ் அகரமுதலி" 1985 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ் லெக்சிகன்:
* இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி "சென்னைப் பல்கலைக்கழக அகராதி"

* இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.

* இவ்வகரமுதலி "தமிழ் லெக்சிகன்" என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி:

* 1985 ஆம் ஆண்டு "தேவநேயபாவணர்"யின் "செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி"யின் முதல் தொகுதி வெளிவந்தது.

* இரண்டாவது தொகுதி 1993 ஆண் ஆண்டு வெளியானது.

* ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

* படங்களுடன் வெளிவந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

கணினி உதவியுடன் அகரமுதலி:
* முழுமையான கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி "கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி".

* விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.

கலைக்களஞ்சியம்:
* தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.

* இது 1902 ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.

* இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.

அபிதான சிந்தாமணி:
* 1934 ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறை பெயர்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.

* இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி கழகம்:
* தமிழ் வளர்ச்சி கழகம் முறையான "முதல் கலைக்களஞ்சியத்தை" தொகுத்து வெளியிட்டது.

* இது பத்து தொகுதிகளை உடையது.

* இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.

கலைச்சொல் அகரமுதலி:
* காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960 ஆம் ஆண்டு தொகுக்கக்கப்பட்டன.

* மணவை முஸ்தபா அறிவயல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.

* அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com