Enable Javscript for better performance
அரியலூர் சுதந்திர தின விழாவில் ரூ. 39.59 லட்சம் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் சுதந்திர தின விழாவில் ரூ. 39.59 லட்சம் நலத் திட்ட உதவிகள்

    By kirthika  |   Published on : 27th May 2016 12:15 PM  |   அ+அ அ-   |    |  

    அரியலூர், ஆக. 15: அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறு அரசுத் துறை சார்பில் ரூ. 39.59 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனில் மேஷ்ராம் வழங்கினார்.
      அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனில் மேஷராம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
      அதைத்தொடர்ந்து, காவல் துறையினர், நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண, சாரணீயர் இயக்கம் ஆகியோரது அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
      அதைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஆட்சியர், பொன்னாடை அணிவத்து கெüரவித்தார்.
      காவல் துறை, தீயணைப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 100 பேருக்கு சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
      மேலும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள்கள், பார்வையற்றோருக்குக் கைக் கடிகாரம், கண்ணாடி, சமூக நலத் துறை சார்பில் 15 பேருக்கு கலப்புத் திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி, 20 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மகளிர் திட்டம் சார்பில் ரூ. 19 லட்சம் சுழல்நிதி, வேளாண் துறை சார்பில் கைத்தெளிப்பான்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் தையல் இயந்திரங்கள், வருவாய்த் துறை சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 10 பேருக்கு ரூ. 2.90 லட்சம் மானியத்துடன் கூடிய பவர் டிரில்லர் கருவிகள் ஆகியன வழங்கப்பட்டன.
      அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா, அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. பிச்சை, கோட்டாட்சியர் இரா. ஜீவரத்தினம், வட்டாட்சியர் எம். எட்டியப்பன், துணை வட்டாட்சியர் எம்.எஸ். தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் பள்ளிகளில் சுதந்திர தினம்
    பெரம்பலூர், ஆக. 15: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
      பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
      அதைத்தொடர்ந்து, எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
      செயலர் பி. நீல்ராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன், இயக்குநர்கள் பி. மணி, பி. பூபதி, ஆர். ராஜசேகர், கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் ராம. மீனாட்சி, கல்லூரி முதல்வர்கள் பி. முத்தரசு, வி. அனுஷா பாஸ்கர், தாயுமானவன், பாஸ்கரன், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
      விழாவையொட்டி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஏரோநாட்டிக்கல் மாணவர்கள் சார்பில் மாதிரி விமானம் பறக்கவிடப்பட்டது.
      தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
      துணைத் தலைவர் வி. ஜான்அசோக், கல்லூரி முதல்வர்கள் ஆர். சுவாமிநாதன், சண்முகசுந்தரம், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
      சாரதா கல்வி நிறுவனங்களின் சார்பில் சாரதா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
      இதில், இயக்குநர்கள் விஜய்ஆனந்த், கிருபா, செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
      கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ். கிறிஸ்டோபர் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
      இயக்குநர் மித்ரா, நிர்வாக அலுவலர் பிரபாகரன், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
      பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு இயக்குநர் எம். நல்லு தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
      அன்னமங்கலம் எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரியில் அக்கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
    இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
      இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    இளந்திரு விருதுப் போட்டிக்கான
    மண்டல அளவிலான
    மாணவர்கள் தேர்வு

    திருச்சி, ஆக. 15: இளந்திரு விருதுப் போட்டிக்கு திருச்சி மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      இதுகுறித்து, கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் இரா. குணசேகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
      தேசிய சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இளந்திரு விருதுக்கான திருச்சி மண்டல அளவிலான தேர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
      இந்த முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
      தேர்வு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம்:
      மேடைக்கலை -புனித வளனார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. ஆசிகா, இ.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். சிவசுப்ரமணியன், படைப்புக்கலை -திருச்சி ஆல்பா பிளஸ் மெட்ரிக். பள்ளி மாணவர் பி. மணிசங்கர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி மாணவர் ஜெ. பிரவின், எழுத்துக்கலை -திருச்சி கமலாநிகேதன் மாண்டிசோரி பள்ளி மாணவி க. சிவரஞ்சனி, அரியலூர் புனித தெரசா மேல்நிலைப் பள்ளி மாணவி வி.எம். விஜயபாரதி, அறிவியல் கண்டுபிடிப்பு -திருச்சி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். மனோஜ்குமார், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். கிஷோர்.
      இவர்கள் அனைவரும் செப்டம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்று அச்செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்க
    பெரம்பலூர், ஆக. 15: சுதந்திர தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
      கோனேரிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் பேசியது (படம்):
      "கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரங்கள் வழங்கி அதன் மூலம் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது.
      இதன்மூலம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொள்ள, இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றினால், அதை ஊராட்சி மன்றத் தலைவர்கள் நிறைவேற்றி கொடுப்பார்கள்.
      முழு சுகாதார கிராமமாக கோனேரிபாளையம் கிராமத்தை மாற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிபநர் கழிவறை அமைக்க ரூ. 2500 செலவாகும். இதில், ரூ. 300 பங்குத் தொகையை கட்டினால் மீதமுள்ள ரூ. 2200 அரசு மானியமாக வழங்கப்படும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் தனிநபர் கழிவறை வசதியை ஏற்படுத்தி இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார் அவக்ய
      மாவட்டத் திட்ட அலுவலர் ச. அமல்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் க. பெரியசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் முத்துசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், ஊராட்சி மன்றத் தலைவர் கே. சாந்தாதேவி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
      இதேபோல, மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
    முன்னெச்சரிக்கையாக
    பெரியார் திராவிடர் கழக
    அமைப்பாளர் கைது

    திருவெறும்பூர், ஆக. 15: திருச்சியில் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றுவேன் என்று கூறிய பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.
      திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் சீதகாதி தெருவைச் சேர்ந்த சன்னாசிமுத்து மகன் ஆரோக்கியசாமி (55). இவர் பெரியார் திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளர்.
      இந்நிலையில், இலங்கையில் 3 ஆயிரம் தமிழர்களை தனி முகாம்களில் அடைத்து வைத்து, அந்த நாட்டு அரசு சித்திரவதை செய்கிறது. அவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டு அரசை மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.
      இந்தத் தகவலின்பேரில், திருவெறும்பூர் போலீஸôர் ஆரோக்கியசாமியை முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
    நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக
    ஆக. 19-ல் மாற்றுத் திறனுடையோர்
    கண்டறியும் முகாம்


    பெரம்பலூர், ஆக. 15: பெரம்பலூர் மாவட்டத்தில் ஊனமுற்றோர் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் முகாம் புதன்கிழமை (ஆக. 19) நடைபெறவுள்ளது.
      இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
      பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக. 19) காலை 10 மணிக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன் முகாமைத் தொடக்கிவைக்கிறார்.
      மேலும், பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்குகிறார்.
      முகாமில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கை, கால் மற்றும் ஊன்றுகோல்கள், மூடநீக்கு சாதனம் ஆகியவற்றை பெறுவதற்கு தகுதியானவர்களை, எழும்பியல் நிபுணர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.
      முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஹைதராபாத் லான்கோ பவுண்டேசன் தொண்டு நிறுவனம் மூலம் உதவிச் சாதனங்கள் தயார் செய்து வழங்கப்படும்.
      எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊனமுற்ற நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    ஆக. 18-ல் வேப்பந்தட்டையில் பருத்தி
    சாகுபடி குறித்த இலவச பயிற்சி முகாம்

    பெரம்பலூர், ஆக. 15: பெரம்பலூர் மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
      இதுதொடர்பாக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.ஆர். முகமதுஹாரூன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
      பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பருத்தி சாகுபடி குறித்த இலவசப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
      கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. முருகேசபூபதி முகாமைத் தொடக்கிவைத்து, விளக்கிப் பேசுகிறார்.
      பயிற்சியில், வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் ம. பரமாத்மா, விரிவாக்க இயக்குநர் ப. கலைச்செல்வன், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டி. ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பருத்தியில் அதிக மகசூல் பெற கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்குகின்றனர்.
    எனவே, இம்முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    பெரம்பலூர் சுதந்திர தின விழாவில் ரூ. 26.56 லட்சம் நலத் திட்ட உதவிகள்
    பெரம்பலூர், ஆக. 15: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 26.56 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் வழங்கினார்.
      சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களை பறக்கவிட்டார்.
      அதைத்தொடர்ந்து, காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியோர் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
      அதைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 18 பேருக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
      அதைத்தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 158 பேருக்கு ரூ. 26.56 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
      அதைத்தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், காவல் துறை சார்பில் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
      கலை நிகழ்ச்சிகளில் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி முதல் பரிசும், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி 2-ம் பரிசும், பனிமலர் மேல்நிலைப் பள்ளி 3-ம் பரிசும் பெற்றன.
      கல்லூரி அளவில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முதல் பரிசும், கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி 2-ம் பரிசும், அரசு இசைப் பயிற்சி கல்லூரி 3-ம் பரிசும் பெற்றன. சிறப்புப் பரிசு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
      சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்திய மாவட்ட காவல் துறையினருக்கு கேடயமும், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியரின் ஊக்குவிப்புப் பரிசும் வழங்கப்பட்டன.
      மேலும், மாவட்டத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 20 பேருக்கும், தீயணைப்புத் துறையினர் 5 பேருக்கும், சிறுசேமிப்புத் துறையினர் 3 பேருக்கும், வேளாண்மைத் துறையினர் 2 பேருக்கும், ஆட்சிமொழி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் கேடயங்களை வழங்கிய ஆட்சியர், அதிக முறை ரத்த தானம் செய்த செஞ்சிலுவைச் சங்கத்துக்கும், ரோவர் கல்லூரிக்கும் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
      வருவாய்க் கோட்டாட்சியர் எம்.என். உதயகுமார், மாவட்டத் திட்ட அலுவலர் ச. அமல்ராஜ், மகளிர்த் திட்ட அலுவலர் அ. ராமசாமி, நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, ஒன்றியக் குழுத் தலைவர்கள் க. பெரியசாமி, க. முத்துகண்ணு, மகாதேவி ஜெயபால், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தேவதாஸ், தமிழரசி, ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரமணிதேவி, கலால் உதவி ஆணையர் அனந்த சுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மருத்துவத் துறை இணை இயக்குநர் ஜி. குணகோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம. ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
      மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. வனிதா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ச. பழனிசாமி நன்றி கூறினார்.
    அரியலூர் பள்ளிகளில் சுதந்திர தினம்
    அரியலூர், ஆக. 15: அரியலூர் பகுதி பள்ளிகளில் சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
      அரியலூர் அருகேயுள்ள கீழப்பழூர் விநாயகா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பள்ளித் தாளாளரும், கல்வி நிறுவனங்களின் தலைவருமான சி. பாஸ்கர் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
      தமிழ் விரிவுரையாளர் ஆர். ராஜா, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எஸ். அம்பலவாணன், விரிவுரையாளர்கள் எஸ். ராமசாமி, பி. பூபதி, எஸ். தேன்தமிழ், என். கருணாநிதி, கே. மகாதேவன், ஆர். சஞ்சீவி, ஐ. அய்யப்பன், ஆர். ராஜசேகர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர். பெரியசாமி, ஆசிரியைகள் எஸ். நிஷாந்தி, எஸ். கௌரி, வி. ஆசாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    லிங்கத்தடிமேடு
      லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு அரியலூர் அரிமா சங்கத் தலைவர் த. பொன்மணி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார்.
      அரிமா சங்க செயலர் எஸ். வெங்கடேஷ், வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் சீ. பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் கு. பாலகிருஷ்ணன், எம்.ஆர். கல்லூரித் தலைவர் எம்.ஆர். கமல்பாபு, ஏ.பி.என். சுதாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
      அதைத்தொடர்ந்து, அரிமா சங்கம் சார்பில் கல்வி நிலைய மாணவர்களுக்கு இலவசமாகச் சீருடைகள் வழங்கப்பட்டன.
    அரசு மகளிர்
    உயர்நிலைப் பள்ளி
      அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கோ. ராமலிங்கம் தலைமை வகித்தார். கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஏ.பி.எஸ். பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
      பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சீ. பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.
    அரியலூர் சி.எஸ்.ஐ. பள்ளி
    இங்கு நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியர் அ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
      சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரயில்வே நிலைய மேலாளர் செ. நாகபூசனம், தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசினார்.
      விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
      ரயில் நிலைய மேற்பார்வையாளர் இரா. வெங்கடாசலம், உதவித் தலைமையாசிரியை க. ஹெலன், தமிழாசிரியை ஜூலி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தேளூர் ஊராட்சியில் ரூ. 5.7 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால்
    அரியலூர், ஆக. 15: தேளூர் ஊராட்சியில் கிராஸிம் சிமென்ட் ஆலை சார்பில் ரூ. 5.7 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
      அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
      தேளூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் ரா. காமராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. சண்முகம் முன்னிலை வகித்தார்.
      தேளூர் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள பங்களிப்புத் தொகை வழங்கி வருவதற்கும், பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் நன்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதற்கும், கிராஸிம் சிமென்ட் ஆலைக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
      மேலும், வி.கைகாட்டியில் காவல் நிலையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும். தேளூரில் சமுதாயக் கூடம் அமைக்க நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
      கிராம நிர்வாக அலுவலர் எம். தங்கராசு, பற்றாளர் ஆர். வெங்கடாசலம், ஊராட்சி உதவியாளர் எம். அசோக்குமார், மக்கள் நலப் பணியாளர் ஆர். ராஜசேகர், உறுப்பினர்கள் ஆர். சந்திரா, டி. செல்வாம்பாள், எம். சின்னதுரை, ஆர். சித்ரா, எம். செல்வராஜ், ஏ. ராமசாமி, டி. மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    வெங்கிடகிருஷ்ணாபுரம்:  இங்கு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் ஐ. முத்துசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வே. லலிதா முன்னிலை வகித்தார்.
      ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி. ராமலிங்கம், உறுப்பினர்கள் அ. பெரியசாமி, ப. செல்வராஜ், ம. மனோன்மணி, ஆ. கருப்பையா, த. சின்னப்பிள்ளை, ஊராட்சி உதவியாளர் ப. தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    எருத்துக்காரன்பட்டி:  இந்த ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் ப. உமாராணி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் த. பரமசிவம், துணைத் தலைவர் அ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      ஊராட்சி உதவியாளர் சோ. கோவிந்தசாமி, உறுப்பினர்கள் சி. பஞ்சநாதன், மா. காமராஜ், சி. முருகன், இ. தாமஸ், சௌ. செல்வராணி, ரா. பாண்டியன், ம. பிரபா, தே. கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    வாலாஜாநகரம்:  இங்கு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் தெய்வ. இளையராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சி. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      உறுப்பினர்கள் ப. லட்சுமி, வி.கே. அப்பாதுரை, ஆ. எலிசபெத், ஆர். கண்ணன், ஆர். கமலகண்ணன், ஏ. சரோஜா, ஏ. ஜாபர்சேட், பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கொடியேற்று விழாவில் காங்.
    கோஷ்டி தகராறு: இருவர் காயம்
    திருச்சி, ஆக. 15:   திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை நடந்த கொடியேற்று விழாவின்போது ஏற்பட்ட கோஷ்டி தகராறில் கட்சிப் பிரமுகர்கள் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 7 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
      சுதந்திர தினத்தையொட்டி, திருச்சியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
      திருச்சி பட்டாபிராமன் பிள்ளைத் தெருவில் நடைபெற்ற கொடியேற்று விழாவின்போது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
      மாநகர இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் வா. முத்துகுமார் (33) தலைமையில் ஒரு தரப்பினரும், வேதமூர்த்தி தலைமையில் மற்றொரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
      இதில், முத்துகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல, நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக வேதமூர்த்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
      இதுகுறித்து, தில்லைநகர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். முத்துகுமார் அளித்த புகாரின் பேரில், வேதமூர்த்தி, ராஜ்மோகன், மிதுன், நிர்மல் ஆகிய நால்வர் மீதும், வேதமூர்த்தி அளித்த புகாரின் பேரில் முருகானந்தம் (29), சிவனேஸ்வரன் (29), குருமூர்த்தி (23) ஆகிய மூவர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp