த மிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்த குறும்பட வட்டத்தின் 34 வது மாதக் கூட்டம் சென்னை , எழும்பூரிலுள்ள ஜீவன்ஜோதி அரங்கத்தில் வெகு விமர்சையாய் நடைபெற்றது. இந்த மாத நிகழ்வு மூன்று அமர்வுகளாய் நடைபெற்றது. அமர்வின் முதல் பகுதியின்போது திரைப்பட இயக்குனர் சிம்புதேவனும் இரண்டாம் பகுதியின் போது இயக்குனர் ஞானராஜசேகரனும் பங்கேற்று குறும்பட , திரைப்பட இயக்கத்
திற்கு வழிகாட்டினர். முதல் அமர்வின்போது இயக்குனர் வசந்தின் "தக்கையின் மேல் நான்கு கண்கள் ' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. டைரக்டர் சிம்புதேவன்
பேசியதிலிருந்து...
"" சின்னவயதில் இருந்தே என்னுடைய காமிக்ஸ் படங்களை குமுதம் , விகடனுக்கு தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டே இருந்தேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் சுஜாதா விகடனில் இருந்தார். அந்த நேரத்தில் எனக்கு கார்ட்டூன் என்றால் என்னவென்றே தெரியாது. கார்ட்டூன் என்பது நகைச்சுவையுடன் பிரச்னைகளைப் பேசுவது என்று சுஜாதா அறிமுகப்படுத்தினார். அதன் பின் விகடன் பரணீதரனைச் சந்தித்தேன். அவரின் பேச்சும் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் பின் விகடன் மாணவர் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து செயல்பட்டேன்.
நான் விகடனில் காமிக்ஸ ý ம் , ஓவியமும் வரைந்து கொண்டிருந்த நேரத்தில் என் எடிட்டர் ஒரு காமிக்ஸ் பண்ணவேண்டும் என்று கூறினார். அப்போது உருவானதுதான் "கி.மு. சோமு '. அடுத்து , சேரனுடன் வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது.
அவரின் படங்களுக்கு பலவிதமான கதாபாத்திர வடிவங்கள் அமைத்துக் கொடுத்தேன். அவரின் திரைக்கதையின் இரண்டாம் பகுதியை அவரின் உதவி இயக்குனர்களிடம் கொடுத்து அனைவரையும் கதையில்
மாற்றங்கள் உருவாக்கி எடுத்து வரச் சொல்லுவார். அப்படி கொண்டுவரப்படும் கதையில் எது தேவை , தேவையில்லை என்பதை இலகுவில் பிரித்துவிடுவார். அதனாலேயே அங்கே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள
முடிந்தது. என்னுடைய அறை நண்பன் ஏ.ஆர்.முருகதாஸ். அவரின் கதைகளுக்காக நான் நிறைய ஸ்டோரி போர்டு வரைந்திருக்கிறேன். அதன் பின்தான் ஷங்கர் சாரிடம் ஓர் உருக்கமான காதல் கதையொன்று சொன்னேன். அதில் உடன்பாடு இல்லாதது போன்று காணப்பட்டதால் ஒரு வரிக்கதையொன்று சொன்னேன். ஒரு லூஸ் மன்னன் கதை என்றேன். பின் ஒருநாள் அழைத்து ""அந்த லூஸ் மன்னனை உருவாக்குங்கள் '' என்றார். ஒருநாள் கதை சொல்லும்போது ""சரி அந்த மன்னனாக யாரை பிக்ஸ் பண்ணியிருக்கிறீர்கள் ?'' என்றார். நான் வடிவேலு என்றேன். அவர் சிரித்துவிட்டு , சரி என்றார்.
அந்த லைன் சொல்லுவதற்கு முன்பாக சந்திரகிரி என்னும் திரைப்படம் பார்த்தேன். அது ஒரு பாதிப்பு. முதலில் இந்த வாய்ப்புக்கு ஷங்கர் சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். நான் சரித்திர சப்ஜெக்டைப் பேன்டஸியாக செய்தேன்.
அரசியலை வரலாற்றுப் பின்னணியுடன் பேசுகிறேன். இது எனக்கு வசதியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் கதைகள் வெளியில் இருந்து வாங்குவது இல்லை. அது தமிழ் சினிமாவின் சாபக்கேடு. முயற்சி பண்ணினால் நல்ல திரைக்கதையாசிரியர்கள் கிடைப்பார்கள். அந்த தப்பான வளையத்துக்குள் நானும் மாட்டியிருக்கேன். "அறை எண் 305 ல் கடவுள். ' இதில் நான் ஆத்திகம் , நாத்திகம் இரண்டையுமே ஒரே தளத்தில்தான் வைத்திருந்தேன். ஆன்மீகத்தில் ஒரு பகுதி நிரூபிக்கப்படவில்லை. விஞ்ஞானத்தின் ஒரு பகுதியும் நிரூபிக்கப்படவில்லை. இதுதான் அந்த சினிமா '' என்றார்.
அடுத்துப் பேசிய ஞான ராஜசேகரன் , "" சினிமா ஊடகம் நம் கைகளில் வந்துவிட்டது. கையில் காமிரா இருந்துவிட்டால் படம் பிடித்துவிடலாம். லாப்டாப் இருந்தால் படத்தொகுப்பு செய்துவிடலாம். இப்பொழுது சிந்திப்பதை அடுத்த நிமிடம் படம் பிடித்துவிடலாம். அடுத்த நிமிடம் படத்தொகுப்பு , பின்னணி அவ்வளவுதான். முந்தைய காலங்களில் சினிமா என்பது அந்நியமாய் இருந்தது. எல்லோருக்குமே படம் எடுக்கும் தகுதி இருக்கிறது. தமிழில் சினிமா மோகம் மிக மிக அதிகம். ஆனால் படம் எடுப்பதற்கு அந்த மோகம் மட்டுமே போதாது. அது ஒரு கலை வடிவம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பத்து நபர்கள் ஒரு கூட்டம் ஒன்றில் சந்திக்கிறார்கள் எனில் , அதில் இருக்கும் ஒவ்வொருவனும் படம் எடுத்திருக்கிறார்கள். இதில் எத்தனை படங்கள் வெளியே செல்லுகின்றன ? இது சரிதானா ? ஒருவர் எதையாவது அழகாக இருக்கிறது என்று பார்த்து
விட்டால் , அதை அப்படியே மனதில் ஊறப் போடுங்கள். அதில் இருந்து வருவதுதான் சரியாய் இருக்கும். குறும்படங்களில் நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.
முந்தைய காலங்களில் இரண்டு படங்களும் ஒரு வாரத்துக்கும் மேல் போனால் மட்டுமே அதன் வசூல் , வெற்றி பற்றிக் கூற முடியும். ஆனால் இன்று அப்படியல்ல. முதல் காட்சியிலேயே படம் வெற்றி , தோல்வியினை முடிவு செய்துவிடலாம். இதை கலை வடிவமாகவும் , ஊடகமாகவும் இனங்கண்டு அணுகவேண்டும். ஊடகத்தை வெற்றுப் பயன்
பாட்டுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
இலக்கியப் படிப்பு என்பதே இந்த இளைஞர்களிடம் குறைந்துவிட்டது. இதை கேட்டால் அது இணையத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு மேல் என்னதான் பேசிவிடமுடியும். இப்படிப்பட்ட சமூகத்தில் என்னால் எதுவுமே செய்யமுடியாது என்ற தன்மை வந்து விடுகிறது.
ஒரு படைப்பாளி என்பவன் ஒளிந்து கிடக்கிறான். நாம் அவனைத் தேடவேண்டும். சந்துகளில் இருப்பான் , எங்காவது ஓர் இடத்தில இருப்பான். ஆனால் நாம் சினிமாவில்தான் வந்து தேடவே ஆரம்பிக்கிறோம். சினிமாவில் இயக்குநர்களுக்கு மரியாதை அதிகம். இங்கே வந்து சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு நான்கு வருடங்களுக்குப் பின்புதான் தெரியும் , நாம் உதவமாட்டோம் என. அதன்பின் அவர்களால் செல்ல முடியாது. இங்கேயே சுற்றிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.
நான் அப்படி நிறையப் பேரைக் கண்டிருக்கிறேன். குறும்படங்கள் திரைப்படங்களுக்குத் தயார் செய்வன. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் ஒரு முறை கேரளாவில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் வீட்டை அடையாளம் காணமுடியாமல் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்க அவர் மிக மரியாதையாய் அவர் வீடு தெரியும் ஏறுங்கள் என்றார். ஏறினேன். அவரிடம் எப்படி அவர் வீடு தெரியும் எனக் கேட்டேன்.
" சார் நாமல்லாம் வாழ்க்கைய ஒரு மாதிரி பாப்பம் சார். அவங்கெல்லாம் ஒரு மாதிரி பாப்பாங்க சார். அதைவெச்சி அவரோட வீட்டைக் கண்டுபிடித்துவிடலாம் ' என்றார். இதுதான் படைப்பாளியின் அடையாளம் '' என உரையை முடித்தார்.