Enable Javscript for better performance
புதையல்: கீழப்பெருமழை விஜய்- Dinamani

சுடச்சுட

    
    புதையலைத் தேடியிங்கு பொழுதெலாம் அலையும் கூட்டம்
    ​புதல்வரையே கூட புதையலுக்காய் கழுத்தறுக்கும்-ஈனத்தை
    எங்கு சொல்ல! எப்படித்தான் இவர் மனத்தில் கோரமாய்
    இவ்வெண்ணங்கள் கொழுந்து விட்டெறிகின்றனவோ?!
    
    உழைத்தலே வாழ்விலென்றும் உயர்ந்திடும் உபாயமென்று 
    கலைத்தொழில் பல கற்றோரிங்கு கழன்றனர்!-அவர் அனுபவமே
    உண்மையில் நமக்கு வாழ்வின் உரைகல்லாய் நின்றிலங்கும் 
    உறுதியாய்ப் பற்றிக் கொண்டால் உயர்வென்றும் நிச்சயமே!
    
    புதையலால்  வாழ்வு மட்டுமல்ல! வரலாறும் வளமை காணும்!
    முன்னோரின் வாழ்க்கை ஏற்றம் முழுதாய் அதில் துலங்கும்!-பின்னாளில்
    வாழும் நம்மின் மாற்றங்கள் நலதா?தீதா?என்றேயுணர்ந்திட   
    இதுவொன்றே நல் உபாயம்!
    
    தானாக க் கிடைத்தாலே அது புதையல்! அது விடுத்து
    நாமாக அடைய எண்ணி நயவஞ்சகங்கள் செய்து-போராடி
    உயிரை மாய்க்கும் பொருந்தாதனவற்றைச் செய்தால்
    பேடி என்ற பெயரொன்றே பேருலகில் நிலைத்து நிற்கும்!
    
    மனித வாழ்வே புதையலென்று மகிழ்வுடனே ஏற்றிட்டால்
    பூவுலகே புனிதமாகும்!புகழுடைய பெரியோரெல்லாம்-கை குலுக்கி 
    உன்னையிங்கு களிப்படையச் செய்திடுவார்!என்றைக்கும் மகிழ்ந்து நீ
    இருந்திடலாம் பெருமைமிகு சிறப்புடனே!
    
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai