Enable Javscript for better performance
புதையல்: பாவலர் கருமலைத்தமிழாழன்- Dinamani

சுடச்சுட

    
    உழைப்பதற்குப்  பெரும்சக்தி   புதைய   லாக
                உடலுக்குள்   இருப்பதினை   அறிந்தி  ருந்தும்
    பிழைப்பதற்குப்   பிறர்பொருளைத்   திருடு   கின்ற
                பிழைதன்னைச்   செய்கின்ற   கயவர்   ரெல்லாம்
    தழைத்திங்கே   உயர்வதினைத்   தடுத்தி   டாமல்
                தலைவணங்கி   அவர்க்கடிமை   செய்ய   லாமா
    அழைப்பிங்கே   யார்தருவார்    ஒன்று   சேர்ந்தே
                அடித்தவரை   நாளெல்லாம்   உழைக்க   வைப்போம் !
    
    அன்பென்னும்   புதையலினை   அகத்துள்   வைத்தும்
                அழகென்னும்   புதையலினை   அங்கம்   வைத்தும்
    புன்னகையாம்   புதையலினை   உதட்டுள்   வைத்தும்
                பூத்தமலர்   பெண்மையினை   மணப்ப  தற்குக்
    கன்னலினைத்  தின்னகூலி   கேட்கும்   ஆண்மைக்
                கயவர்க்குத்   தலைவணங்கிக்   குனிய   லாமா
    தன்மானம்   யார்தருவார்   பெண்க   ளெல்லாம்
                தழலாக   எழுந்தாலே    எல்லாம்   மாறும் !
    
    அருஞ்சங்க   நூல்களென்னும்   புதையல்   தன்னை
                அழகாக   வீட்டிற்குள்   அடுக்கி   வைத்தே
    தெருவினிலே   எச்சிலிலை   நக்கு   தற்குத்
                தெருநாய்போல்   பிறமொழிக்காய்   ஏங்க   லாமா
    கருவாகப்   பாண்பாடு  ஒழுக்கத்   தோடு
               கலந்தொன்றாய்   அறிவியலும்    உள்ள  செம்மை
    பெருமைமிகு    தமிழ்மொழியைப்   போற்ற  சேர்ந்தே
                பேரறிவைப்   பெற்றுநம்மின்   காலில்   நிற்போம் !
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai