Enable Javscript for better performance
புதையல்:  அ_வேளாங்கண்ணி- Dinamani

சுடச்சுட

    
    சேர்க்கப்பட்டச் சொத்து
    மறைக்கப்பட்டுப் பின்
    புதைக்கப்பட்டு என்றோ
    தோண்டப்படும் போது
    கிடைக்கப்பாட்டால் ஆகிறது
    புதையலாய்..
    
    ஒவ்வொருவருக்குள்ளும்
    இருக்கும்
    திறமையும் அப்படியே..
    சரியான நேரத்தில்
    கண்டுகொள்ளப்படும் திறமையும்
    புதையலே..
    
    அதன் மதிப்பு பார்வைக்குத்
    தெரியாது
    அதன் மினுமினுப்பு யாருக்கும்
    புலப்படாது
    அது அளிக்கும் வெற்றி
    மகிழ்ச்சிக்கு கணக்கில்லை
    
    கிடைத்த வாழ்க்கை கூட புதையலே
    சரியான வழியில் வாழ்ந்தோமெனில்
    நேர்வழியில் நடப்போருக்கு
    தேவையில்லை எந்தப் புதையலும்..
    
    நேர்மையான மனிதரெல்லாம்
    நாட்டின் புதையலே
    உதவி செய்யும் உத்தமரே மனிதரில்
    புதையலே
    பொன் காசு மட்டும் புதையலல்ல‌
    நல்ல குணமும் மனமும் கூட
    புதையலே...
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai