Enable Javscript for better performance
புதையல் :  கா. மகேந்திரபிரபு- Dinamani

சுடச்சுட

    
    மறைத்தாலும் மறுத்தாலும் 
    எடுத்தாலும் கொடுத்தாலும் 
    கண்டாலும் கேட்டாலும் 
    வந்தாலும் போனாலும் 
    உண்மையை  ஊர் அறியும் !
    
    காலங்கள் எடுக்கலாம்
    கதவுகள் திறக்கப்படும் 
    கனியும் வேளையிலே 
    கண்ணீர் கூட புதைக்கப்படலாம் !
    
    மனிதன் புதைக்கும் புதையல் 
    மனிதம் எனும் குணத்தை ! 
    அன்பு எனும் குழந்தையை 
    ஆணவம் எனும் அரக்கனிடம் 
    சிக்கிவிடாது சீர் நோக்கி சிந்திப்போம் !
    
    கனவுகள் புதைக்கப்படலாம் 
    கவலைகள் புதைக்கப்படலாம் 
    உலகம் இருக்கும் வரை 
    புதையல் இருக்கும் 
    தீயதை புதைப்போம் !
    நல்லதை விதைப்போம் !
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai