சுடச்சுட

  
  கனிவுடனும் பொறுப்புடனும் கருத்துடனும் செயல்படும்நல்
  புனிதநன் நாடென்றிதைப் போற்றுகிறார்!---இனியென்றும்,
  எங்குமே வறுமையது இன்னாட்டில் இல்லையெனும்
  மங்கலமே எனைநனைத்த மழை!
  
  நாடின்றோர் வல்லரசென நம்மைபிறர் போற்றுகிறார்
  கோடிகோடி மக்கள்நாம் கொண்டாட!---நாடின்று
  துலக்கமதை பலப்பலத் துறைகளிலும் கண்டமறு
  மலர்ச்சியதே எனைநனைத்த மழை!
  
  இன்னாட்டின் வளர்ச்சியதும் ஏற்றமுறக் கண்டதெலாம்
  மன்மோகன் ஆட்சிதனின் மகிமையால்!---முன்னமதாய்,
  வீட்சிகண்ட நிதிநிலைமை வீருகொண்டு எழுச்சியுற்ற
  மாட்சியதே எனைநனைத்த மழை!
  
  ஆழ்ந்தமன உறுதியுடன் அயராமல் போராடி
  பாழ்பட்ட சட்டம்நீங்கப் பார்த்திட்டார்!---ஏழுநாட்கள்
  துகிலின்றிப் போராடி துலக்கமதைக் கண்டயிளைஞர்
  மகிமையதே எனைநனைத்த மழை!
  
  பொழுதெல்லாம் போராடி போற்றத்தக்க வெற்றிகண்டார்
  பழுதற்ற மாணவர்தம் பண்பினால்!---எழுச்சிகண்டு,
  நெகிழ்ந்திடுதே மக்கள்தமின் நெஞ்சமெலாம், காண்கின்ற
  மகிழ்ச்சியதே எனைநனைத்த மழை!
  
  கொண்டமன உறுதிசிறிதும் குலையாமல் மாணவர்கள்
  எண்ணற்றோர் போராடும் எழுச்சியற்றார்!---ஆண்டாண்டாய்,
  வேண்டிநின்ற அவர்களன்று , விவேகமுடன் காத்திட்ட
  மாண்பதுவே எனைநனைத்த மழை!         
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai