சுடச்சுட

  
  வள்ளுவனும் தன்குறளில் அழகாய் தான்
      வான்சிறப்பை பலவாறு எழுதி வைத்தான்
  அள்ளுகின்ற நெற்புதையல் வேண்டு மென்றால்
      அழகாய்தான் மழையும் பெய்தல் வேண்டும்
  துள்ளிவிளையாடும் மழலை யெல்லாம்
      தூவிடும் சாரலிலே நனைதல் வேண்டும்
  புல்முதலாய் மரங்களும் செழிப்பதற்கே
      பெய்துதான் எனை நனைத்தல் வேண்டும்
  திரளான கருமேகங் கூட்டம் பார்த்தே
      தெருவினிலே நின்றிருந்த வேளை தனில்
  உரக்கவே குரல்கொடுத்து உள்ளே வா 
      உனக்கு தடுமன் பிடிக்கு மென சொல்ல
  இரும்மா ! மழைச் சாரல் பிடிக்குமென
      இருந்திட்ட வேளை தன்னில் ஆங்கே
  சடசடவென பொழிந்திட்ட  மழை யதனின்
      சாரலும் எனை நனைத்து விட்டனவே!
  புரண்டோடும் மழைநீரில் துள்ள லாய்
      போகின்ற மீன்களை பிடித்த தாலே
  பிரம்பெடுத்து புடைத்திட்ட என் தந்தைக்கு 
      புன்னகையை பரிசாக அளித்த தாலே!
  திருந்தாது ”இதுவென்றே”  வெளியே தள்ளி
      திண்ணைதான் இருப்பிட மென் றுரைத்தும்
  வருந்தாமல் மகிழ்ச்சியில் குதித்தே துள்ளி
      வான்மழையில் மீண்டும் நனைந் தேனே!
  காசுகொடுத்து வாங்கிய நோட்டு தனில்
      கணக்கின்றி தாட்களை  கிழித்து தான்
  ஆசையோடு கப்பல்க ளாய் செய்து
      அதனை மழைநீரில் ஓடவே விட்டு
  வீசுகின்ற காற்றின் பக்கம் போகின்ற
      வேகம் பார்த்தே வியந்தே நிற்கையில்
  வீசுகின்ற காற்றோடு நன்மழைப் பெய்தே
      ஆசையான காகித கப்பல்களும் ஆடித் தான்
  அமிழ்ந்துதான் போனாலுமே அடுத் தடுத்து
      ஆசையாய் நனைந்தேன்  மழையில் தானே!                        
  
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai