சுடச்சுட

  

  குடையொன்றும் தேவேயில்லை
  கூட வர காதலியும் தேவை இல்லை
   மழையே நீ வந்தாலே !
  குறுவிதைகள்  மொட்டுக்கள் மலர்ந்திடும்
   நீ  வந்ததாலே !

  கார்மேகம் கை அசைத்து உன்னை
  பூமிக்கு அனுப்பியதோ..
  மின்னல் லாந்தல் ஏந்தி இரவில்
  வழி காட்டியதோ …
  மின்னும் துளியே வரும் வழியில்
  காற்று பட்டை தீட்டியதோ ..

  உன்னில் ஒவொருமுறை நனையும் போது
  புதிதாக பிறக்கின்றேன்
  என்னை நனைத்த மழையே …
  நீ மாதம் மும்மாரி வராமல் போனது …
  மனிதர்கள் செய்த பிழையே !

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai