சுடச்சுட

  

  வானில் இருள் சூழ்ந்தது
  என் மனதில் ஒளி நிறைந்தது
  மழைத் தூரல் விழுந்தது
  என் உள்ளம் குளிர்ந்தது
  இளமை துள்ளிக் குதித்தது
  என் நெஞ்சம் பாடி மகிழ்ந்தது 
  பேய் மழையாய் மாறிய சாரல்
  சிறிதும் களைப்பின்றி தொடர்ந்தது
  கவலையைக் களைந்த என்னுடல்
  சலிப்பின்றி நனைந்து களித்தது
  சட்டென மனம் இடறியது
  கணத்தில் இதயம் கனத்தது
  என்னைத் திட்ட இப்போது
  உயிரோடில்லா அன்னையை
  என் கண்முன் நிறுத்தியது
  எனை நனைத்த மழை!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai