சுடச்சுட

  

  தூக்கி எறிந்த விதையினால்
  அடைக்கலமான சாக்கடையின்
  கழிவினில் தளிராய்
  இப்புவியில் உதயம்!

  வான்மகள்
  அருளிய அமிர்தவர்ஷிணி
  கொடையினால்
  பிறருக்கு உணவாகும்
  குருகுல வாசலில்
  மாங்கன்றாய் பிறப்பு!

  வான்மகள் வரையாது
  வழங்கிய நீர்கொடையால்
  மாமரமாய் நான் வளர்ந்தேன்!

  கேட்க கேட்கத் திகட்டாத
  மழலைத் தமிழ்பாடமழையில்
  நான் நனைந்தேன்!

  எனை நனைத்த வான் மழைத்தாயின்
  அரவணைப்பில் பூவாய்
  கனியாய் கொட்டிய
  மகிழ்வில் நான் திளைக்க
  எனது நிழலில் மாம்பூவின்
  வாசனைத்தூபத்தில்
  பறவைகளும் படுத்துறங்க
  பரிதியின் ஊசிக் கிரணங்களில்
  சிந்து பாடிய வான்முகிலாள்
  அமிர்தவர்ஷிணியாய்
  எனது கிளைஉறவுகளை நனைக்க

  வானவில் வர்ணஜாலத்தில்
  அட்டிகையினைப் புனைந்த
  மயக்கத்தில் நான் கிறங்க
  துவல்லவோ புவியின் விளையாட்டு!

  மழைச் சாரலில் ஒதுங்கிய
  கம்பனும் பாட்டிசைக்க
  போட்டிக்கு வந்த ஒட்டக்கூத்தனும்
  பசுமைச் செழிப்பில்
  பகைமை மறந்து
  விசைக்க தாளம் தட்ட
  சில்வண்டுகளும்
  அரங்கேற்றம் பாடியதே!

  மருதநில பாக்கு மரங்கள்
  வான்மகள் அருளிய கொடையில்
  குளித்த  இலைகளை
  சீவிச் சிடுக்கெடுக்க
  குயிலினத்தைத் தேடிக் காத்திருக்கின்றன!

  இயற்கை வளம் காக்கும்
  மரம் மட்டும் வளர்க்க
  சுயநலம் மிக்க மனிதன் ஏன் மறந்தான்!

  என்ற வினாவிற்கு யாரே
  விடை பகர்வார்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai