சுடச்சுட

  

  மழையே! மழையே!
  வானின் மகளே!
  நீ வந்தால் நனைப்பாய்
  என்னையும் மண்ணையும்!

  மழையே! மழையே!
  நீ அளவோடு பொழிந்தால்
  பள்ளத்தை நிரப்புகிறாய்!
  அளவின்றி பொழிந்தால்
  எங்கள் இல்லத்தை நிரப்புகிறாய்!

  மழையே! மழையே!  வா வா
  நீ வந்தால்தான்
   மரம் குளிக்கும்
  மலை குளிக்கும்
  சிலை குளிக்கும்
  எங்கள் தலை குளிக்கும்!

  மழையே! மழையே!
  நீ! வானம் தந்த பரிசு
  வாங்காத நிலம் தரிசு!
  உன் மனசு ரொம்ப பெருசு

  மழையே! மழையே!
  நீ வந்தால்
  விவசாயிக்கு சாகுபடியாகும்!
  நீ வராவிட்டால்
  விவசாயியே சாகும்படியாகும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai