சுடச்சுட

  

  வான்மழை'யே
  நீ வருவாயென
  முன்னறிவிப்பு இல்லாமல்
  முன் நின்றாய்
  மூச்சுவிடவும் மறந்து
  போனதே எனக்கு.

  நீ வருவாயென நாள்காட்டி
  சோதிடமும் உரைக்கவில்லை

  புயல் எச்சரிக்கை விடுத்தும்
  பாதை மாறிப் போகும்
  மழை

  தீடீரென்று வந்து
  மண்ணை குளிர்வித்து
  செல்வதுபோல் வந்து
  என் நெஞ்சம் குளிரச்
  செய்தமைக்கு நன்றி.

  வையகத்து
  வரவேற்பில் குறை
  இருந்தால் மன்னிக்க

  மீண்டும் சந்திக்க
  நானும் தவித்திருக்க

  நீயும் நினைத்திருக்க
  வேண்டுகிறேன்..!!!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai