சுடச்சுட

  

  அவனும்...அவளும் 
  அதே ஊர்க்கார ர்கள்தான்!
  ஒத்த வயதில் ஒன்றாய்ப்படித்த தனால்...
  அரும்பிற்று காதல் அவரிருவர் இடையினிலே!

  பூவுலகம்    தனிலே 
  புது சொர்க்கம் தான் கண்டார்!
  பாவுலகம் புகழுமாறு
  பண்பாய்ப் பழகி வந்தார்!

  விட்டிடுமா இவ்வுலகம்
  விளையாடி அவர் மகிழ?
  பட்டகடன் கேட்பதைப்போல்
  பதைக்க வைத்தது ஜாதி சொல்லி!

  ஆண்ஜாதி அவனென்றும்
  அதற்கேற்ற பெண்ஜாதி அவளென்றும்
  எடுத்துரைத்த வாத த்தை 
  ஏற்கவில்லை இச் சமுதாயம்!

  ஊர்மாறிப் போனாலும்
  உறவற்றுப் போனாலும்
  தேடித் தேடி அவரை 
  திகைக்க வைத்தது உறவுமுறை!

  பட்டதே போதுமென்று 
  பரிதவித்த அவ்விருவர்
  எட்டா உலகினையே
  ஏகினர் கை கோர்த்து!

  முட்டாச் செயல்தான்
  முடிந்து போன அவர் முடிவு!
  எட்டாச் சமுதாயம் 
  எப்போது தான் திருந்தும்?!

  நம் கண்களிலே பெருகும் மழை
  நனைத்து விலக்குமா ஜாதியினை?!
  காதல் வயப் படுவோருக்கு 
  கற்பிக்குமா நீதியினை?!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai