சுடச்சுட

  

  குடையைத் துறந்து நினைவைச் சுமந்து
  மனதைக் குடைந்த செல்லமழை

  என் 
  மனதைக் கடக்காத புயலின் மழை

  நனைக்கவும் நினைக்கவும் செய்த மழை
  எனை சிலிர்த்திடச் செய்த உன் சீற்றமழை

  அற்புதமானது
  நனைக்கும் மழை
  ஆனந்தமானது
  நினைக்கும் மழை

  காளான்களாகக் கவிதைகள்
  செழிக்கப் பாறையை நெகிழ்த்திய பருவமழை

  இது நாணலை நனைத்த மழை

  எல்லா மழையும் சேர்ந்து
  பொழிந்தால்
  எப்படி தாங்கும் இந்த நிலம்?
  எனது இதயம் கரைந்து வழியும் நிதம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai