சுடச்சுட

  
  பிறிதொரு நாள் ஆதவன் தன் கிரணங்களால்
  பூமிதாயை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான்
  மேலைநாட்டுச் சட்டை போட்ட
  செய்தி படிக்கும் தமிழச்சி 
  வறண்ட வானிலை என படம் காட்டி மறைந்தாள்
  மிளகாய் வத்தலும் தனியாவும்
  பொடியாக காய்ந்தன வாயில் கோலத்தில்
  சூரியனை வணங்கி குமரன் ஒருவன்ஆரம்பித்தான் தன்
  இளநீர் வியாபாரத்தை
  குடையுடன் சென்ற கிழவரை 
  நமுட்டுச் சிரிப்புடன் கடந்தேன்
  மெல்லிய தென்றல் ஒன்று உடல் தழுவ
  கதிரவனை புறந்தள்ளி பூமித்தாயை 
  மெல்ல நனைக்க ஆரம்பித்தான்
  வருண தேவன்
  நானும் நனைத்தேன் சொட்ட சொட்ட
  கிழவரின் முன்யோசனையையும்
  மிளகாய் காய வைத்தவள் என்ன
  செய்கிறாளோ என்ற யோசனையுடன்
  
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai