சுடச்சுட

  
  அன்னையின் பாச மழையில் நனைந்த போதும்
  தந்தையின் கண்டிப்பு மழை கொதித்த போதும்
  சுகானுபவத்தை தொட்டேன் ; துளிவிழும் மழையம் 
  மகானுபவத்தை தருவதில்லை தானே ?
  
  மனைவியின் அணைப்பில் மகிழ்ந்து மக்களின்
  மழலை மழையைக் கண்டபோது உடலில்
  புளகாங்கித முண்டாகி புரிந்த இன்பத்தின் மேலாம்
  பொட்டு மழைதான் என்ன செய்திட மு டியும்?
  
  கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தபோது 
  பட்ட துன்பம் கோடி , பகர்ந்திட வார்த்தையில்லை;
  வீட்டில் தண்ணீர், வெ ளியில் தண்ணீர், ரோட்டை மேவி
  விழுந்தோடும் வெள்ளம்; நனைத்த மழையோ கனைத்து சிரித்தது.
  
  விதைத்த பயிருக்கு விழும் மேல்மழை இல்லை ; இன்றோ
  விவசாயி படுவதோ சொல்லி மாளாத தொல்லை;தரையை
  நனைத்து வைக்கவும் மழைப் பொழிவில்லை; நாவை
  நனைத்து வைக்கவும் நீரின்றிப் போகும் நாளை.
  
  நீரை சேமிக்கும் நிலையில்லை யானால் இனிமேல்
  யாரை நொந்தும் பயனின்றிப் போகும் ; மரங்களை நட்டு
  மாநிலம் காப்போம் ; மழையை வரவழைக்கும் மரங்களே
  வானிலை மாற்றி அனைவரையும் நனைக்கும்; காக்கும்.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai