சுடச்சுட

  

  துவைத்த தாவணியின்
  கடைசி சொட்டு நீரை
  வைரமாக பத்திரபடுத்துகிறேன்...

  *மாங்கு மாங்கென
  அம்மியில் அறைந்த
  உளுந்தப்பருப்பு துவையலின்
  கூடுதல் சுவையே உன் நெற்றிநீரின்
  வியர்வை துளிதான்...

  *சொட்ட சொட்ட
  நனைந்த கருங்கூந்தலோடு
  பால்கனி ஓரத்தில்
  படக்கென்ன கூந்தலை அடித்துஓடிவரும்
  சிறு தூரல் தான் ஜம் ஜம் ஊற்று எனக்கு ...

  *நீ
  வாசல் தெளித்த
  வாளி தண்ணீரெல்லாம் 
  புனிதநீர் தான்...

  * நீ நீர் தெளித்த சாரலில்
  பூப்பெய்தியது 
  பருவ காதல்....

  *வெட்க மழையில்
  நனைத்துவிட்டு போகிறாய்
  உன் ஒற்றை புன்னகையில்
  எப்படி துவட்டிக்கொள்ள
  முடியும் என்னால்?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai