சுடச்சுட

  

  குடை பிடித்துச் சென்றாலும் ;
  குதூகலத்துக்கு பஞ்சமில்லை !
  துளித்துளியாய் கொட்டும் நீரில் ;
  துள்ளி விளையாடும் குழந்தை நான் !

  கால்களெல்லாம் நனைகையிலே ;
  கவலையெல்லாம் கலையுதே !
  மாதம் மாறி பெய்யும் மழையில் ;
  மனதெல்லாம் நிறையுதே ! 

  எனை நனைத்த மழையே !
  வானம் பாத்த பூமியும் ;
  வாய் பிளந்து கிடக்குது !
  நிலத்தையே நம்பியவன் ;
  நீருக்காக கெஞ்சுகிறான்  !

  விதைத்தவனோ விரக்தியிலே -
  வீடு திரும்ப மறுக்கிறான் !
  வஞ்சிக்காமல் வந்துவிடு -
  வாழ்வின் வசந்தம் தந்துவிடு !

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai