சுடச்சுட

  
  வெற்றிமுரசு தன்னைக்கொட்டி விளக்கத்தைக் கூறு,
       விளக்கங்கண்டது பாரதமென ஆனந்தம் பாடு !
  உற்றபலத் துறைகளிலும் உயர்ந்ததைக் கண்டு
       உலகமதே வியப்பதனை போற்றிட்டு ஆடு!
  கற்றகல்வி தன்னைக்கொண்டு சிறப்பினைக் கண்டோம்
       கணக்கற்றப் பொறியாளர்கள் தமைநாம் கொண்டோம்!
  மற்றயெந்த நாட்டுக்குநாம் தாழ்ந்தவர் ஆவோம்,
       மங்கள்யாண் வெற்றியதே சான்றென ஆகும்!
  
  அண்டமிதில் நாமும்யின்று வல்லரசானோம் பலப்பல
       அணுவுலைகள் தனைபடைக்கும் ஆற்றலை பெற்றோம்!
  கண்டம்விட்டு கண்டம்பாயும் கணைகளைக் கொண்டோம்,
       கணக்கற்ற அணுகுண்டுகள் தன்னையும் செய்தோம்!
  விண்வெளியில் நம்திறன்கண்டு வியக்காதார் யார்,
       வெற்றிகண்ட நமைக்கண்டு அஞ்சாதார் யார்?
  உண்மையான வல்லரசே என்றிட்டும் ஆனோம்,
       உலகினிலே ஐந்தாவது நிலைதனைக் கண்டோம்!
  
  முரசினைக் கொட்டிட்டு முழக்கமிடு! ---நாடின்று
       முன்னேற்றங் கண்டதனை உரக்கக் கூறு!
  இரந்தன்று வாழ்ந்திட்டக் கொடுமைகளெல்லாம்---நாட்டில்
       இனியில்லை என்பதனை போற்றிநீ பாடு!
  தரங்கொண்ட ஆட்சிதன்னை எழுபதுஆண்டாய்க்---கண்டு
       தரணியிலே உயர்ந்ததனை போற்றிட்டு ஆடு!
  உரங்கொண்ட நெஞ்சினோடு உழைத்ததனாலே---இன்று
       உயர்ந்திட்டோம் வல்லரசென மகிழ்ந்திட்டு ஆடு!
  
  ஆற்றல்மிக்க நாடென்றே ஆகிவிட்ட நம்நாட்டை
  போற்றியின்று பலரும்நமைப் புகழ்கின்றார்!---ஏற்றமுறக்
  கண்டதனை இல்லையெனும் கபோதிகளை ஒழிப்பதேநாம்
  கொண்டிட்ட உறுதியெனக் கூறு!    
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai