சுடச்சுட

  

  நெய்தல் நிலத்திலோர்
  அறப்போர் மூண்டது

  பிரிந்திருந்த உறவெல்லாம்
  ஒன்றாய்ச் சேர்ந்தது

  உணர்வுகள் பொங்கியெழ
  தடைகள் தகர்ந்து விழ
  உரிமையை மீட்டது

  சூழ்ச்சிகள் யாவும்
  செல்லாது போனது

  ஒற்றுமைதான்  பலமென்று
  நிரூபணம் ஆனது

  கடலொலி இகைக்க
  கரவொலி மிகைக்க
  சூடிய வாகைக் கண்டு
  பார் வியக்க
  எதிரிகள் நடுங்க
  கொட்டட்டும்
  வெற்றி முரசு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai