சுடச்சுட

  
  எத்தனை பேர் வயிற்றினிலே இவர்கள் அடித்தார்கள்
    கற்றார் கல்லாதார் கல்லூரி ஓட்டலென்று
  அத்தனை துறை சார்ந்த அனைவர் சொத்தினையும்
    அடிமாட்டு விலை பேசி அதனையும் ஏமாற்றி 
  எள்ளளவும் ஈரமின்றி எல்லாவற்றையும் தம்பெயரில்
    எழுதிக் கொண்டோர்க்கு இந்நாட்டின் தலைமையா?
  
  கலெக்டர் டவாலி காலம்பலவாய் பணியாற்றியதால்
    தானே இனி கலெக்டரென்று தம்பட்டம் அடிப்பதைப்போல்
  மணியடித்த பள்ளி பியூன் வராத தலைமையாசிரியர் இருக்கையமர்ந்து
    இப்பள்ளி தலைமை இனிமேல் எனக்குத்தான் என்பதைப்போல்
  தோட்டத்தில் எடுபிடியாய்த் தோழியாய்க் கிடந்தோரெல்லாம் 
    நாட்டு முதல்வராம் நியாயமாவாய் இது இருக்கு?
  
  தொண்டர்கள் தம் ரத்த த்தால் சுகவாழ்வு பெற்றோரின்று
    அவர்தம் விருப்பத்தை அணுவளவும் மதியாது
  காசு பணத்திற்கென்றே கயவாலிகளுடன் கை கோர்த்து 
    நாட்டைக் கூறு போட்டு நயவிலைக்கு விற்பதற்கு 
  நாள் பார்க்கத் துணிந்து விட்ட நய வஞ்சக நரிக் கூட்டத்தை 
   விரட்டிய பின்னரே வெற்றிமுரசைக் கொட்ட வேண்டும்!
  
  ஏழைகள் வாழ்வில் என்றுதான் நல்லொளி வருமோ
    பாட்டாளி வர்க்கமென்று பதவி பெற்று உயர்ந்திடுமோ
  நன்னெஞ்சம் கொண்டோர் என்று நலம்பெற்று வாழ்வாரோ
    உயர் எண்ணம் பெற்றோரெல்லாம் உண்மையில் மகிழ்வாரோ
  அன்றைக்கே கொட்ட வேண்டும் அதிசப்தமாய் வெற்றிமுரசினை
    அந்த சப்தந்தான் அதிர வைக்கும் இவ்வையத்தை!
  
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai