சுடச்சுட

  

  பெண் எனும் பெரும்சக்தி
  புவிதனில் அவதரித்த
  பெருமைதனை
  புவியெங்கும் கொண்டாடிடா!

  பெண்கல்வி தழைத்தோங்க
  பெண்உரிமை வளர்ந்தோங்க
  ஒருவனுக்கு ஒருத்தி
  உரிமை நிலைபெற
  பாலியல் கொடுமை அழிபட
  வெற்றி முரசு கொட்டிடடா!

  எனதருமை இளைஞனே!
  தாரம் ஒன்றே முழங்கிவிடு!
  மேல்சாதிகீழ்சாதி
  பேசுவோர் நா அறுபட
  சட்டங்களைத் தெளிவாக்கி
  திருத்தி எழுதிட
  புறப்படுவாயா!

  ஓடும் உதிரத்தில்
  இல்லையப்பா சாதி
  என்றே நீயும்
  வெற்றிமுரசு கொட்டுவாயா!

  ஏழை பணக்காரன்
  பாகுபாடின்றி சட்டம்
  இயற்ற வழி வகை
  காண முரசு நீயும்
  அறைவாயா!

  நாம் செய்யும்தீயன
  யாவும் பாசஉறவுகளை
  பாதிக்கும் என்றே உணர்ந்து
  நன்மையே காண
  வெற்றிமுரசு அறைவாயா!

  சமன் செய்யும் தராசுக்கோல்
  போல உலகம் வாழ
  வெற்றிமுரசு கொட்டடா!                              

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai