சுடச்சுட

  

  உண்மை நிலைத்திடும் 
  உரிமை மீண்டிடும் 
  வெகுண்டு எழுந்திட 
  வெற்றி பிறந்திடும் 
  அமைதி வழியே 
  என்றும் தொடர்ந்திடும் 
  நாளைய உலகம் 
  பின்பற்ற தொடங்கிடும்!..

  சிகரம் உயரமே 
  ஏறுதல் கடினமே 
  வழுக்கல் மிகுதியே 
  சறுக்கல் அதிகமே 
  பிளவினைப் பிடித்திட 
  கவனமாய் நகர்ந்திட 
  உச்சியும் நெருங்கிடும் 
  வெற்றியும் கனிந்திடும்!..

  நீண்ட இரவும்  
  மெதுவாய் நகர்ந்திடும் 
  வாழ்வினில் வந்திடும் 
  துன்பம்போல் துயரம்போல் 
  வெள்ளி முளைத்திடும் 
  விடியல் தோன்றிடும்
  உழைப்பில் உயர்வில்  
  வெற்றி நெருங்கிட!..

  உணர்ச்சிகள் பொங்கிட 
  உக்கிரம் கூடிட 
  வேகம் ஏறிட 
  விவேகம் உதவிட 
  இச்சை  மேலிட
  இலக்கு நெருங்கிட 
  பந்தயம் தொடர்ந்திட 
  பதைப்பு கூடுமே!..

  இடைவிடாமல் முயன்றிட 
  இலக்கும் நெருங்கிடும் 
  இடையிடையே தோன்றிடும் 
  அலுப்பையும் தாண்டியே 
  களைத்து நில்லாமல் 
  தொடர்ந்து உழைத்திட 
  வெற்றி நிலைத்திடும் 
  இனிமை நிறைந்திடும்!..

  மனது சொல்லிடும் 
  வழியில் நடந்திடு
  நல்லதே தொடர்ந்திடும் 
  துணிவாய் விரைந்திடு 
  உன்னதம் தந்திடும் 
  செயல்கள் புரிந்திடு 
  வெற்றி கிடைத்திடும் 
  விடாமல் உழைத்திடு!..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai