சுடச்சுட

  

  அனைத்தும் நிறைந்த அகிலத்தில்

  மனிதனே உனக்குள்
  தாழ்வு எழுவதேன் ???

  சறுக்கி ஏறும்.. வழுக்கு மரம் கூட
  சறுக்காமல் தரும் வெற்றி..

  சாதிக்க வயதில்லை..மனம் எழுந்தால்
  சரித்திரங்கள் தூரமில்லை..

  மனதறியா குருவிகளும்..
  மாட மாளிகை கூடு கட்ட..

  ஏக்கப் பெருமூச்சு விட்டு--தினம் தினம்
  ஏழ்மையில் தவிப்பதேன் ???

  விழுந்த விதைகள் கூட
  வீரத்தோடு எழுந்து நிற்கும்...ஈரம் பட்டால்.

  விட்டுப்போன சொந்தங்களும்..உன்னை ஒரு
  எட்டு வந்து பார்த்திடவே...மனிதா
  சாதிக்க நினைத்திடு..

  சரித்திரங்கள் படைத்திடு....
  புன்னகைத்து வாழ்ந்திடு...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai