சுடச்சுட

  

  உலகில்
  எம்மதமும் சம்மதம்
  என்று எண்ணும்
  மதச்சார்பற்ற மணமுள்ள
  மக்கள் சமுதாயம்
  மலர வேண்டுமென
  வெற்றி முழக்கமிடு
  கொட்டு முரசே !

  பொன் நகை மேல்
  பேராசை கொள்ளாமல்
  புன்ன(ந)கையே போதும்
  என்று கூறும்
  இள மங்கையர்கள்
  வலம் வரவேண்டுமென
  வெற்றி முழக்கமிடு
  கொட்டு முரசே !

  தன் மக்கள் நலமே
  தன் மனதில் எண்ணாமல்
  நாட்டு மக்கள் நலமே
  மனதில் எண்ணும்
  தன்னலமற்ற தூய
  அரசியல் தலைவர்கள்
  ஆட்சியில் என்றும்
  அமரவேண்டுமென
  வெற்றி முழக்கமிடு  
  கொட்டு முரசே!

  புத்தன் ஏசு காந்தி
  காட்டிய  அன்பு வழியில்
  ஆன்மீகப் பாதையில்
  உண்மையுடன் நடக்கும்
  நல் இதயங்கள் நலமுடன்
  உலகில் நடமாடவேண்டுமென 
  வெற்றி முழக்கமிடு
  கொட்டு முரசே !                           

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai