சுடச்சுட

  

  வெற்றி முரசும் கொட்டுவது எப்போ ?
  வேதனையும் தீர்வது எப்போ ?
  வெளுத்ததெல்லாம் பாலென்று -
  வெள்ளேந்தியாய் இருந்துவிட்டாய் !

  விழுந்து கிடந்தவனும் ;
  வீறுகொண்டு எழவைத்தாய் !
  விதி வழி சென்றவனை ;
  வீரனாய் நிமிரவைத்தாய் !

  வெற்றி முரசே !
  கொள்கையெல்லாம் ;  
  விண்ணை தொடும்வரை !
  கொட்டு முரசே !

  சங்கடத்திலும் -
  சாதனைகள் தொடர :
  சலசலப்புக்கு அஞ்சாமல் ;
  கொட்டு முரசே !

  உண்மையோடு நீ இருந்தால் ;
  உலகமும் உன் பின்னால் வரும் !
  உயரிய சிந்தனையோடு ;
  கொட்டு முரசே !

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai