சுடச்சுட

  

  காட்டின் நடுவே
  கூட்டத்திலே அடுத்த
  தலைவர் யார் என்றே
  ஆலோசனைதான்
  நடந்ததுவே!

  பொல்லா நரிக்கூட்டந்தான்
  அரியாசனம் காண
  ஆளாய்ப் பறந்தனவே!
  மதியூகி மந்திரி
  யானையும்தான்
  காட்டுமக்கள் கூட்டத்தின்
  முடிவுகாண
  மக்கள்கூட்டத்தை
  கூட்டியதுவே!

  பொல்லா நரியின்
  சுயரூபத்தால்
  விலைக்கு வாங்கப்பட்ட
  காட்டுமக்கள்
  மது மயக்கம்
  தந்த மயக்கத்தினால்
  அரியாசனத்தை
  பொல்லா நரிக்கு
  அளித்தனவே!

  மதியூகி மந்திரியும்
  நல்லான் முயலின்
  யோசனையால்
  அரியாசனத்தின் அடியினிலே
  நெருப்பு குழியொன்று
  அமைத்ததுவே!

  பொல்லா நரியின்
  முகத்தினிலே
  அரியாசனம் அமரும்
  பெருமையினிலே
  பொத்தென அங்கு
  அமர்ந்ததுவே!

  அமர்ந்த வேகத்தில்
  பொல்லா நரியும்
  நெருப்பு குழியில்
  வீழ்ந்து மாண்டதுவே!

  காட்டிற்கொரு விடிவு
  பிறந்தது இப்போது!!

  நாட்டின் அரியாசனத்திற்கு
  பெருமை தருபவரும் உளரோ!!!!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai