சுடச்சுட

  

  மனித குணங்களை அழித்துக்கொண்டு
  நம் மனங்களையெல்லாம் மறந்துவிட்டு
  பதவி ஒன்றை மனதில் வைத்து
  பணமிருந்தால் போதுமென்ற எண்ணங்கொண்டு
  அதிகார ஆசையில் அகங்காரம் கொண்டு
  நீதியினை வேரறுத்து
  கூடா செயல்களைக் கூசாமல் செய்வார்
  தானென்ற அகந்தையில் பொதுநலம் துறப்பார்

  உலகினில் எதுவும் நிலையில்லை
  ஆறடி நிலம்கூட சொந்தமில்லை
  எதுவும் நம்முடன் வருவதில்லை
  வாழ்க்கையில்  இதைநாம் உணர்வதில்லை

  கடந்தவைகளை மறந்துவிட்டு
  நிகழ்வுகளில் கவனம்கொள்வோம்
  எதிர்காலத்தை மனதில் கொண்டு
  நல்லுறவை நாம் வளர்ப்போம்
  உலகில் சிறந்த அரியாசனம்
  மக்கள் மனங்களில்  நாம் இருப்போம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai