சுடச்சுட

  
  எனதன்பே!
  உன் இதய அரியாசனத்தில்
  வீற்றிருப்பது...
  நான்தான்...
  நான் மட்டும்தான்...
  என்றறிந்த நொடியிலிருந்து...
  இப் பூவுலகமே
  புது சொர்க்கமாகிப் போனதடி!
   
  சாதாரண மரங்கூட
  கற்பகத் தருவாய்
  காட்சியளிக்குதடி!
  என் பிம்பத்தைப்
  பிரதிபலிக்கும் கண்ணாடி...
  திடீரென என்னைப்
  பேரழகனாய்க் காட்டி...
  ஆனந்த அதிர்ச்சியில்
  என்னை ஆழ்த்தி விட்டதடி!
  பூக்கள் அத்தனையும் 
  புது வண்ணத்தில் மலர்ந்து
  என்னைப் புரட்டிப் போடுதடி!
   
  நேற்று வரை
  சாதாரணமாகத் தெரிந்த டூ வீலர்...
  இன்றோ...
  ஏழு குதிரை பூட்டிய
  எழில் தேராக...
  இளவரசன் என்னை
  சுமந்து வருகிறதடி!
  உன் பார்வை அம்புகள்...
  கர்ணனின் கழுத்தில் விழுந்த...
  தர்ம தேவதை கை பட்ட 
  மலர் மாலைகளாக 
  என்னை மகிழ்விக்கிறதடி!
   
  இது போதும் எனக்கு!
  என் இதய தேவதையே!
  எடப்பாடி போல...
  எனக்கு இன்னொரு அரியாசனம்
  தந்தால்கூட அது எனக்கு 
  தேவையில்லை என் தங்கத் தாரகையே!
  மூன்றாவது நபரின்
  முணுமுணுப்பு இல்லாமல்...
  இருப்போம் நாம் இருவரும்
  ஒரே அரியாசனத்தில்!
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai