சுடச்சுட

  

  அகிலத்தில் தானே 
  தோன்றியதோ மனித இனம்??,
  தேடிச்செல்லும்,
  வழியெல்லாம் ரத்தக்கறை..

  அழித்திட்ட உயிரெல்லாம்,
  அதிகமாக இருக்கும்போது,
  தவறாக இருக்குமோ,
  தடயமனைத்தும்..

  எப்பொருள் அடைய,
  மெய்ப்பொருள் அழித்திட்டாய்,
  கண்டுவிட்டாயோ,
  காலனின் வழி...

  தப்பிக்க வழி அடைத்து,
  தடயங்கள் தராமல்,
  கெக்கலித்து சிரிப்பது,
  யார் இப்போது..

  இன்னும் மறக்கவில்லை,
  நீ செய்திட்ட தவறுகள்,
  இனி மன்னிக்க வழியுமில்லை,
  அதற்கினி நேரமுமில்லை..

  முடிவுப்பொழுது நெருங்கிவிடின்,
  யார் தடுப்பார்,
  இயற்கையதின்,
  அரியாசனம்..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai