சுடச்சுட

  
  அரியாசனமா?!
  அது எனக்கு வேண்டாம ப்பா!
  சரியாசனம் 
  தந்தாலே போதும ப்பா!
   
  அரியாசனத்தில் 
  அமரும் பல பேர்...
  நிம்மதி கெட்டு
  நீள் துயில் கெட்டு
  அமைதி கெட்டு
  ஆளுமை கெட்டு
  சுற்றம் கெட்டு 
  சுகங்கள் கெட்டு 
  எல்லாம் கெட்டு 
  அவர்களும் கெட்டு
  விட்டால் போதுமென்று 
  விழுந்தடித்து ஓடுவதை
  சரித்திரம் நன்றாய்
  பதிவில் வைக்கும்!
   
  அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு
  தனியாசனம் இழந்தோர் கதைகள்
  பலவும் இந்தப் பாரினில் உண்டு!
  வேண்டாம் நமக்கு எந்த ஆசனமும்!
   
  பறவைகள் போல...
  தடம் ஏதும் பதிக்காமல்...
  பறந்து வாழ்ந்து 
  முடிப்போம் பிறவியை!
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai