சுடச்சுட

  

  ஜனநாயகத்தில்
  அறியா சனங்கள்
  அரியாசனங்களை
  தேர்ந்தெடுக்கும்!

  அறியா சனங்களுக்குப்
  பிடித்தவர்களை
  அரியாசனங்கள்
  பிடித்துக் கொள்கின்றன.

  அரியாசனத்தை
  வென்று பிடிப்பவனை விட
  பிடித்து வெல்பவனாலேயே
  ஆட்டம் காண்கிறது
  அரியாசனம்!

  அரியாசனத்தால்
  வாழ நினைப்பவன்
  கொள்ளைக்காரன்!

  அரியாசனத்தை
  வாழ வைப்பவன்
  கொள்கைக்காரன்!

  அரியாசனத்திற்கு
  பெருமை சேர்ப்பவன்
  இறந்தும் இருப்பவன்
  அரியாசனத்திற்கு
  சிறுமை சேர்ப்பவன்
  இருந்தும் இறந்தவன்!

  அரியாசனத்திலிருந்து
  மக்களை வழிநடத்துபவன்
  தலைவன்!

  அரியாசனத்திலிருந்து
  தன் வாழ்கையை நடத்துபவன்
  திருடன்!

  ஜனநாயகத்தில்
  அரியாசனத்திற்கு
  வெறும் தலைகள் மட்டுமே
  கணக்கிடப்படுகின்றன
  தலைக்குள் இருப்பதல்ல!

  வரலாற்றில் எதிரி வீழ்த்தியதால்
  இழந்த அரியாசனத்தை விட
  அருகில் இருப்பவனின் சூழ்ச்சியால்
  இழந்த அரியாசனங்களே அதிகம்!

  அரியாசனத்தில்
  மனிதர்கள் மாறலாம்!
  அறியாசனத்திற்கான
  மாண்பு மாறலாமா?

  அரியாசனத்தை
  எதிரியின் ஏவுகணையிலிருந்து
  காப்பற்று வதைப்போலவே
  கூடவே இருந்து
  குழி பறிப்பவனிடமிருந்தும்
  காப்பாற்றிக்கொள்!

  சிலர் அரியாசனத்திற்கு
  அழகு செய்கிறார்கள்!
  பலர் அரியாசனத்தாலேயே
  அழகு பெறுகிறார்கள்!

  சிலர் அரியாசனத்தை
  தேடுகிறார்கள்!
  சிலரைத்தான் அரியாசனமே
  தேடுகிறது!

  என்றும் நினைவில்கொள்
  அறியா சனங்களுக்கு
  சேவை செய்யவே
  அரியாசனங்கள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai