சுடச்சுட

  

  அரியா சனங்கள்
  அமர்வதற்கு
  வாய்ப்பே தருவதில்லை
  அரியாசனம்.

  அமர்வர்கள்
  நல்லவராவென 
  அறிவதில்லை
  அரியாசனம்.

  அரியாசனத்தில்
  அமர வைப்பவர்கள்
  அரியா சனங்கள்.

  அரியா சனங்களை
  அலட்சியப்படுத்துகின்றன
  அரியாசனங்கள்.

  அரியாசனங்களுக்கு
  ஆசைப் படுபவர்கள்
  உடன் இருப்பவர்களையும்
  உதற தயங்குவதில்லை.

  அப்பன் மகனையும்
  அண்ணன் தம்பியையும்
  பிரித்தாளும் ஆற்றல் பெற்றது
  அரியாசனம்.

  இருப்பவரையும் நிரந்தரமாக
  இருக்க  விடுவதில்லை
  அரியாசனம்.

  எல்லோரும் போட்டியிட்டாலும்
  ஒருவரே அமரக்கூடியதாக உள்ளது
  அரியாசனம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai