சுடச்சுட

  
  அனல் பறக்குது அரசியல் களம் !
  அத்தனையும் அரியாசனம்வேண்டி !
  அரியாசனம் !
  அமர்வதற்கு அல்ல   உன்னை -
  ஆள்வதற்கு !
   
  குழப்பத்திற்கு தூபம் போட்டு ;
  குதூகலம்! கும்மாளம் !
  குழம்ப  வேண்டாம் !
   
  உட்க்கார விரும்பாத -
  உழைக்கும் வர்க்கமே !
  ஆளுமையை கையில் எடுக்குது -
  அதிகார வர்க்கம்  உன் -
  அமைதியை கலைந்து பார் ! 
  உண்மை புரியும் !
   
  ஐந்து நிமிட பயணத்துக்கே ;
  ஓட்டுநர் இருக்கை தவிர -
  ஓடோடி சண்டைபோடும் மானிடனே !
   
  அரியாசனம் சுகம் அறியா அப்பாவி நீ !
  அறிவுக்கண்ணை திறந்து பார் !
   
  ஆட்சியை பிடிக்க ஆயிரம் பொய் !
  மாற்றம் தருவதாய் மக்களை ஏமாற்றும் !
  மனங்களை கொள்ளைகொள்ள ;
  பணங்களை இறைக்கும் !
   
  விழித்துக்கொள் !
  அரியாசனம் -
  உனக்கும் சொந்தம் !
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai