சுடச்சுட

  

  கவியொருவன் மனவலியில்
  கண்ணீரோடு தூதனுப்புகிறேன்
  வாக்கினை வஞ்சகனுக்கு விற்றுவிட்டு
  வாழ்க்கையை வாங்க இயலாது
  வயல்வெளியெல்லாம்  அழித்துவிட்டால்
  வாய்க்கரிசி வெளிநாட்டில் கிடைக்காது 
  குடியில் நாளெல்லாம் கழித்துவிட்டவன்
  குடி உயர வழியேது
  வீதியில் பெற்றோரைத் தவிக்கவிட்டு
  கோவில்கள் சென்றாலும் புண்ணியமேது 
  ஊழல் பெருச்சாளியாய் உலாவந்து
  கலிகாலமிதுவென்றால் பொருளேது
  அநீதியை கட்டவிழ்த்து ரசித்துவிட்டு
  மழை வேண்டினால் பயனேது
  பணமும் பதவியுமே குறிக்கோளாயின்
  வாழ்வில் நிம்மதி காண்பதேது
  தன் மதி கேளா மானிடனுக்கு 
  வான்மதியே நீ இதை சொல்லாயோ?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai