சுடச்சுட

  

  சந்தன நிறத்தில் இருப்பாளாம்
  செங்கனி இதழில் சிரிப்பாளாம்!
  சுந்தர மொழியில் கதைப்பாளாம்
  சுந்தரி என்பது அவள் பேராம்!

  சந்திரனே நீயும் வருவாயே!
  அந்தம நேரத்தில் உருவாயே!
  சங்கம சேர்க்கைக்கு ஒரு வார்த்தை
  சிந்தித்துப் பார்த்து வரச் சொல்லு!

  தவிக்கிற மனசை நீ உணர்த்து!
  தணிக்கிற பதிலுக்குக் காத்திருப்பேன்
  வசவுகள் இல்லா வானத்திலே!
  இசைவினுக்காக வாழ்ந்திருப்பேன்!

  நின்வதனத்தை தினமும் பார்க்கையிலே!
  கண்ணசைவற்று நிற்கும் பார்நிலவே!
  உன் வாய்மொழி வசனம் காதலிலே!
  செந்தேன்மொழி இனிப்புகாதினிலே!

  மதிமுகமான நிலவே நீ!
  சதியெனக் கென்றே போய்ச்சொல்லு
  கதியென இருக்கேன் அவளுக்காய்!
  பதியென்ற நினைப்பில் நனவுக்காய்

  நிலவே நிலவே தூதாய்ப் போய் -என்
  நினைவினி லுள்ளதைச் சேர்ப்பாயே
  காதலை அவளும் ஏற்பாளே! -அன்றி
  இக்கவிதையை முற்றத்தில் சேர்ப்பாயே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai