சுடச்சுட

  

  கருங்கூட்டச் சிப்பி மேகத்திலே
  உதித்திட்ட வெண்மதியே!
  இமவான் வரைந்த
  உலக வரைபடத்தில்
  பெண் என்பவள் பெரும் சக்தி!

  கருங்கூந்தல் இரசிக்கும்
  மனித உள்ளம்
  முகக் கருமைதனை
  வெறுப்பதும் ஏனோ!

  வரதட்சணை நெருப்பினில்
  இன்னமும் கருவண்ண
  முதிர் கன்னிகள்
  மெழுகுவர்த்தியாய்
  எரிந்து கொண்டிருக்கின்றனர்!

  உனதழகு முழுமதி
  வண்ணத்தை பெண்களிடத்தில்
  நிரந்தரமாக வரைந்துவிட
  பிரமனிடம் தூது  செல்வாயோ!

  உனதழகை இரசிக்கத்தானோ
  வெண்மல்லிகையும் இரவில்
  மணக்கிறது!

  மல்லிகைசூடும் கருங்கன்னியரின்
  மனம் மகிழ
   வழி வகையும் செய்வாயோ!
  வெண்ணிற முகம்
  பெறவே  தூது நீயும்
  செல்வாயோ!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai