சுடச்சுட

  

  நிலா விடு தூது
  காலையில் கண்படும் நீ
  மாலையில் எங்கு செல்வாய்
  மலையில் மறைந்திட்டாய் என 
  மக்கள் நினைப்பர்
  ஞாலம்விட்டுச் சென்ற என் 
  கோலமணியிடம் நீயெனக்கு
  மெல்லமெல்ல தூது சென்றதை 
  யார் அறிவார்
  மங்கையைக் கண்ட 
  நாள் முதல் மதியிழந்தேன்
  செவ்வாய் சீராளைக் காணாது 
  கதியிழந்தேன்
  பித்தம்கொண்டு அவளைக்காண 
  திரிந்தழைகிறேன்
  புத்தியில் புகுந்து விட்டாள் 
  சித்தமும் தெளிவிழந்தேன்  
  ஊனில் உயிரில் 
  உணர்வில் கலந்ததால்
  எனை வாட்டும் துன்பத்திற்கு அருமருந்தாய்
  என்மனக்கண் நிறைந்தாளிடம் தூது செல் 
  வானில் உலாவும் மங்கிய நிலவே
  போனவளைக் கொண்டுவரத் தூது செல்லாய்! 
  ஊன் கலந்தாளை என் உள்ளப்பயிர் செழிக்க
  என் கையறுநிலை கூறிக் காதல் வாழ 
  தேனிலாவைத் தேடி நிலாவே தூது செல்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai