சுடச்சுட

  

  மேகத்தில் ஒளிந்து
  விளையாடும் வெண்ணிலாவே!
  உன்னைப் பாடாத
  கவிஞன் இல்லை
  உன்னைப் பாடாதவன்
  கவிஞனே இல்லை!

  விசாவும் விமானமும் இல்லாமல்
  உலகம் சுற்றும் வாலிபனே!
  உலகில் லஞ்சம் ஊழல் இல்லா
  நாட்டைக் கண்டு வந்து
  எங்கள் அரசியல்
  தலைவருக்கு சொல்வாயா?

  நிலாவில் வடை சுட்ட
  பாட்டி கதை கேட்டு
  வளர்ந்தவன் தான்
  இன்று
  நிலத்தையே சுருட்டும்
  வேலையை செய்கின்றான்!

  வெண்ணிலவே!
  உன்னை காதலுக்கு
  தூதுவிட்டு மணந்தவனும்
  தேன் நிலவுக்கு வந்தே
  நன்றிக் கடன்
  செலுத்துகின்றான்!

  நீர்நிலைகள்
  நீ முகம் பார்க்கும்
  கண்ணாடி!
  அதை வீடு கட்டி
  உடைத்து விட்டோம் -எங்கள்
  கண் முன்னாடி!

  நிலாவில்
  நீர் கண்ட மனிதனுக்கு
  நிலத்தில்
  நீர் காணமுடியவில்லை!

  காதலுக்கு
  தூது சென்ற வெண்ணிலாவே!
  நீ!
  ஆற்று நீர் கேட்டு
  அண்டை மாநிலத்துக்கு
  தூது சென்றால்
  அவர்கள் கொடுக்கும்
  தண்ணீரில்
  ஆற்று மணலின்
  தாகம் கூட தீராது!

  சுட்டெரிக்கும்
  சூரியனிடமிருந்து
  ஒளி வாங்கி
  உமிழ்கின்ற வெண்ணிலவே!
  சூழ்ந்திருக்கும்
  மேகத்திற்கு தூது போய்
  மழை வாங்கித் தருவாயா?

  மழை
  மண் வந்து சேர்ந்தால்தான்
  எங்கள் கண்ணுக்கேகண்ணீர் கிடைக்கும்
  மறக்காமல் செய்வாயா!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai