சுடச்சுட

  

  தூது செல்வாயோ முழுநிலவே
  என்னவளிடம்
  நின் போல்முழுநிலவே 
  என்னவளின் வதனம் அதனால் 
  என்னவளை இனம் காண உனக்குஎந்த
  இடரும் இல்லை உன் குணம்ஒத்ததே
  என்னவளின் குணமும்
  மேகங்களுடே நீ மறைந்து 
  விளையாடுவது போல் 
  அவளும் தன் முகம் மறைத்து 
  என்னை சீண்டுவது வாடிக்கை

  அமாவசையன்று நீ பூமியுடன் ஊடல்
  கொண்டு பாராமுகம் கொள்வது போல் 
  அவளும் என் மேல் அவ்வப்போது
  ஊடல் கொள்வதுண்டு கொஞ்சம்
  கேட்டு வருவாயா? ஊடல் 
  கொண்டாளோ? என்று.
  உன் மூன்றாம் பிறை ஒத்தது
  அவளது புன்சிரிப்பு.

  அமாவாசை கடந்த பத்து நாள் 
  நிலவை ஒத்த அவள் முகம் 
  நீ ஊடல் தணிந்து
  பூமியை மேகங்களுடே 
  மறைந்து பார்ப்பது போல்
  அவள் வீட்டு சன்னலில் என்னைத்
  தேடி பாதி மறைந்து நிற்பதை நான்றிவேன்
  பெளர்ணமியன்று நீ பூமி மேல் பொழியும் பால் 
  வெளிச்சம் ஒத்தது என்னவள் என் மேல் வீசும்
  காதல் பார்வை
  தூது செல்வாயோ முழுநிலவே

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai