சுடச்சுட

    
    தனியாய் தவம் செய்யும் நிலவே
    உனைவிட்டுச் சென்றது யார்?
    இணையாய் நீ இல்லை இங்கு
    தீவினையைச் செய்தது யார்?
    
    எனைப்போல் நீயும் இங்கே
    தவிப்பாய்
    இருப்பது எனக்கும் வலி
    எனக்காக உதவி நீ செய்து
    காட்டுவாயோ காதல் வழி?
    
    என் கவிதை வரிகளைக் கொண்டு
    உனக்கான ஆறுதல் செய்வேன்
    என் காதல் தீபத்தை ஏற்றி
    எனக்குள்ளே மாறுதல் செய்யேன்
    
    உன் பார்வை படும்வேளை அவளை
    என் பாட்டை உணர்த்திடுவாயா
    என் பக்கம் வரச்சொல்லி நீயும்
    எனக்காக வாதம் செய்வாயா
    
    பிடிவாதம் அவள் குணம் தானே
    பிடி கொடுத்திட‌ மாட்டாளே
    அடி நூறு வாங்கவும் தயாரே
    என்பதை நீயும் சொல்வாயா
    
    இதய வலி தாங்குதல் கஷ்டம்
    மருந்தென்றால் காதல் மட்டும்
    துடிக்கிறேன் தவிக்கிறேன்
    காதல் வேண்டி
    ஆக்கிட வேண்டாம் ஆண்டி
    
    எனை அவள் சேர்ந்திடும் வேளை
    உன்புகழ் உலகில் சொல்வேனே
    எனக்காக நீ தூது சென்றதை
    என்கவி வழியே சொல்வேனே
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai