சுடச்சுட

  
  அறிவியலின்  அற்புதத்தால்  இல்லி  ருந்தே
        அடுத்தஊரில்  அடுத்தநாட்டில்  வாழு  கின்ற
  அறிந்திட்ட  உறவோடும்  நண்ப  ரோடும்
        அருகருகே  அமர்ந்துநேரில்  பேசல் போன்று
  பொறியியலில்  உருவான  பேசி  மூலம்
        பொழுதெல்லாம்ம  இன்றழைத்துப்  பேசு  கின்றோம்
  அறிவியல்தாம்  வளராத  அந்த நாளில்
        அரும்ஓலை  தனிலெழுதி விடுத்தார்  முன்னோர் !
  
  கல்வெட்டாய்  வடித்துவைத்தும்  புறாவின்  காலில்
        கட்டிவைத்தும்  குதிரைவீரன்  கையில்  தந்தும்
  பல்வேறு  செய்திகளை  நாட்டிற்  குள்ளும்
        பக்கத்து  நாடுகட்கும்  தெரிய  வைத்தார் !
  சொல்வதற்கு  நாணித்தன்  காதல்  நெஞ்சை
        சொற்களிலே  ஓவியமாய்  வரைந்து  பாவில்
  வெல்தமிழை  தென்றலினை  நிலவைத்  தூதாய்
        வெளிர்பசலை  மங்கையர்கள்  அனுப்பி  வைத்தார் !
  
  கற்பனையில்  அன்றுகண்ட  நிலவில்  இன்றோ
        கால்வைத்தும்  கல்லெடுத்தும்  ஆய்வு  செய்தே
  விற்பனைக்கும்  சிலநாட்டோர்  அறிக்கை  விட்டும்
        வீடுகட்டிக்  குடியேற  அழைப்பும்  தந்தார்
  வெற்றுரைகள்  இல்லையென்று  விஞ்ஞா  னத்தின்
        வெற்றியாலே  நாளையிது  நடக்கும்  போதில்
  ஒற்றுமையாய்  நாடுமதம்  மொழியென்  றின்றி
        ஒன்றிணைந்த  மனிதத்தில்  வாழ்வோம்  அங்கே !
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai