சுடச்சுட

  

  கங்குல் பொழுதில் கவினுறவே காட்சிதந்தே
  எங்கும் குளிரொளியை ஏற்றுகிறாய் - திங்களே!
  உன்னை வருணித்தே ஒப்பில்லாப் பாட்டியற்றி
  என்றும் புலவருனை ஏத்துகிறார் - நன்றாக!

  ஆலமர் செல்வன் அழகுமுடி மீதினிலே
  கோலமாய் வீற்றிருக்கும் கோதையே! - ஞாலத்தார்
  ஏற்றி உரைப்போர்க்கே ஏவல் புரிந்திடுவார்!

  போற்றிப் புகழ்கின்றேன் நானுன்னை! - ஏற்றருள்வாய்
  என்வணக்கம்! வெண்ணிலவே! இந்த உலகத்தில்
  நன்மைக்குப் பாடுபடும் நல்லவர் - உண்டெனிலே
  அன்னவர்பால் செல்வாய்! அறிமுகம் செய்தென்றன்
  அன்பை எடுத்துரைப்பாய் சந்திரனே! - 'உன்னிடத்தில்
  உள்ளம் இழந்தாள் ஒருத்தி இருக்கின்றாள்;

  கள்ளம் கபடமிலாள்; செந்தமிழாள் - வெள்ளத்தில்
  சிக்குண்டது போலச் சிதறுண்ட தாய்நாட்டை
  இக்கணமே மீட்டெடுக்க ஏகுவாய் - தக்கபடி
  மீட்டெடுத்துக் காப்பாற்றி மேதினியோர் போற்றுவண்ணம்
  நாட்டை அரசாள்வாய்; நல்லாளை - ஊட்டுமன்பால்
  கட்டி யணைத்துக் கரம்பிடித்து வாழ்ந்திடுவாய்;

  தட்டி விடவேண்டாம்' என்றுரைக்க - நட்பால்
  உனைத்தூ தனுப்ப உவந்தழைப்பேன்! நீதான்
  எனக்காகத் தூதுசெல் இன்று!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai